SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குன்னூர் மலைப்பாதையில் விபத்து சென்னை வாலிபர்கள் இருவர் பலி

9/12/2018 12:25:53 AM

சென்னை, செப். 12: குன்னூர் மலைப்பாதையில் நடந்த சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.
சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகன் அஜீத்குமார் (21). சென்னை புழலை சேர்ந்தவர் தயாளன் மகன் அரவிந்த் (21). இருவரும் நண்பர்கள். இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், நண்பர்கள் 3 பேருடன் மூன்று பைக்கில், நேற்று முன்தினம் சென்னையிலிருந்து ஊட்டிக்கு சென்றுள்ளனர். பின்னர், 5 பேரும் நேற்று சென்னைக்கு பைக்கில் புறப்பட்டனர். குன்னூரை அடுத்த காட்டேரி மலைப்பாதையில் வந்தபோது, அஜீத்குமார் மற்றும் அரவிந்த் வந்த பைக் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நடுரோட்டில் விபத்துக்குள்ளானது. இதில், இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, உடன் வந்த நண்பர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியிலேயே இருவரும் இறந்தனர். இதுகுறித்து, குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சமவெளி சாலையில் ஓட்டுவதுபோல், மலைப்பாதையில் அவர்கள் வேகமாக இறங்கியபோது திடீரென பிரேக் பிடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து பைக் விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்