SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

நாளை விநாயகர் சதுர்த்தி விழா 1,600 இடங்களில் சிலைகள் அமைக்க அனுமதி விதவிதமான வடிவங்களில் சிலைகள் தயார்

9/12/2018 12:25:51 AM

திருவண்ணாமலை, செப்.12: திருவண்ணாமலை மாவட்டத்தில், நாளை நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 1,600 இடங்களில் விநாயகர் சிலைகளை அமைத்து வழிபட, கூடுதல் கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பிரசித்தி பெற்ற விநாயகர் சதுர்த்தி விழா, நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, விநாயகர் சிலைகளை பொது இடங்களில் பிரமாண்டமாக அமைத்து வழிபட பக்தர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். சிலைகள் அமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பு அடைந்துள்ளது.ஆனாலும், இதுவரை எப்போதும் இல்லாத அளவில் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்க மாவட்ட நிர்வாகம் புதிய நடைமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதன்படி, போலீஸ், ேகாட்டாட்சியர், நெடுஞ்சாலைத்துறை, மின்துறை ஆகியவற்றிடம் முன் அனுமதி பெற வேண்டும்.மேலும், களிமண்ணால் செய்யப்பட்ட, சுடப்படாத மற்றும் எவ்வித ரசாயணக் கலவையும் இல்லாத, கிழங்கு மாவு மற்றும் மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாராகும் ஜவ்வரிசி தொழிற்சாலை கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் மட்டுமே விநாயகர் சிலைகள் வடிவமைக்க வேண்டும்.

நீரில் கரையும் தன்மையுடைய மற்றும் தீங்கு விளைவிக்காத, இயற்கை வண்ணங்களையுடைய விநாயகர் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ராசயண வண்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதிக்க இல்லை.மாவட்டம் முழுவதும் 1,600 இடங்களில் சிலைகள் அமைக்க போலீஸ் தரப்பில் இருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதுதவிர, கிராமப்பகுதிகளில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் நூற்றுக்கணக்கான இடங்களில் வைக்கப்பட உள்ளன.விநாயகர் சதுர்த்தி விழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் விதவிதமான வடிவங்களில், வண்ணங்களில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. நேற்று முதல் சிலைகள் விற்பனையும் விறுவிறுப்பு அடைந்திருக்கிறது.இந்நிலையில், பொது இடங்களில் அமைக்கப்படும் விநாயகர் சிலைகளை, திருவண்ணாமலை தாமரை குளம், செங்கம் சிங்காரப்பேட்டை ஏரி, கோணிராயன் குளம், வந்தவாசி ஐந்துக் கண் வாராபதி, பூமா செட்டி குளம், போளூர் கூவூர் ஏரி ஆகிய நீர்நிலைகளில், மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் வழிகாட்டுதல்படி, சுற்றுச்சூழலை பாதிக்காதவகையில், சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதித்திருக்கிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
 • autumnfestivalchina

  சீனாவில் இலையுதிர் காலம் நிறைவு விழாவையடுத்து வண்ண விளக்குகளால் ஜொலித்த நகரங்கள்

 • drumpsusma

  நியூயார்க் ஐ.நா. தலைமையகத்தில் 73வது பொதுக்குழு கூட்டம் : உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

 • rahulgandhiamedi

  உத்தரபிரதேசத்தில் 2வது நாளாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்றுப்பயணம்

 • usstromattack

  ஃபுலோரன்ஸ் புயல் தாக்கத்திற்கு பிறகு இயல்பு நிலைக்கு திரும்பி வரும் அமெரிக்கா

 • pandathirtysix

  36வது பிறந்த நாளை கொண்டாடிய உலகின் வயதான பாண்டா கரடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்