SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடந்த 2015ம் ஆண்டு முதல் முடங்கியிருக்கும் அண்ணாமலையார் கோயில் தங்கத் தேர் மீண்டும் பவனி வருவது எப்போது? பக்தர்கள் ஏக்கம்: கோயில் நிர்வாகம் அலட்சியம்

9/12/2018 12:25:36 AM

திருவண்ணாமலை, செப்.12: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கடந்த 2015ம் ஆண்டு முதல் முடங்கியிருக்கும் தங்கத்தேர், மீண்டும் எப்போது பவனி வரும் என பக்தர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்துள்ளனர்.பஞ்சபூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாக அருள்பாலிக்கிறது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில். ஆயிரம் ஆண்டு பழமையும், பெருமையும் மிக்க இத்திருக்கோயிலின் சிறப்புகளில் குறிப்பிடத்தக்கது, சுவாமி வீதியுலா வரும் ரதங்கள். வெறெந்த கோயில்களில் அமைந்திராத வகையில், அண்ணாமலையார் கோயிலில் மட்டும், 7 ரதங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது.அதன்படி, ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழாவின் 6ம் நாளன்று வலம் வரும் வெள்ளித் தேர், 7ம் நாளன்று வலம் வரும் பஞ்ச ரதங்கள் குறிப்பிடத்தக்கதது. இந்த 6 ரதங்களும், மாட வீதிகளில் பவனி வருவது வழக்கம்.ஆனால், தங்கத் தேர் மட்டும் திருக்கோயில் 3ம் பிரகாரத்தில் மட்டுமே வலம் வரும். திருக்கோயிலுக்கு வெளி பிரகாரங்களில் தங்கத் தேர் பவனி வருவதில்லை. பக்தர்கள் விரும்பும் நாட்களில், நேர்த்திக்கடனாக தங்கத் தேர் இழுத்துச் செல்வது தனிச்சிறப்பு.

அண்ணாமலையார் கோயில் மகா ரதம் (சுவாமி தேர்) மிகவும் பழமையானது. வெள்ளித் தேர் கடந்த 1907ம் ஆண்டு உருவானது. ஆனால், வெள்ளித் தேர் பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையின் பயனாக, ₹87 லட்சம் மதிப்பில் கடந்த 2006ம் ஆண்டு உருவானது. வெள்ளித் தேரின் உயரம் 16 அடி. கடந்த 16.3.2006 அன்று தமது முதல் பவனியை தங்கத் தேர் தொடங்கியது.இந்நிலையில், அண்ணாமலையார் கோயில் மகா கும்பாபிஷேக திருப்பணி காரணமாக, கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து, தங்கத் தேர் பவனி செல்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கும்பாபிஷேகம் முடிந்ததும், மீண்டும் தங்கத்தேர் பவனி வரும் என கோயில் நிர்வாகம் அறிவித்தது.எனவே, அண்ணாமலையார் கோயில் 3ம் பிரகாரத்தில் கோயில் உள்துறை நிர்வாக அலுவலகம் அருகே இரும்பு தகடுகளால் மூடி, தங்கத் தேர் நிலை நிறுத்தி பாதுகாப்பாக வைத்தனர். திருப்பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேமும் கடந்த ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி நடந்து முடிந்தது.எனவே, அதன்பிறகு தங்கத் தேரை மீண்டும் சுவாமி வீதியுலாவுக்கு பயன்படுத்தப்படும் என பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தொடர்ந்து பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி ஒரே இடத்தில் தேர் நிலை நிறுத்தியிருந்தால், அதன் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதனால், தங்க தேரை பவனிக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்நிலைலையில், தங்கத் தேரை முழுமையாக சீரமைத்து (மராமத்து பணி) பயன்பாட்டுக்கு கொண்டுவர கோயில் நிர்வாகம் கடந்த ஆண்டு முடிவு செய்தது. அதன்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர் உறுதித் தன்மையை ஆய்வு செய்யும் பணியில் ஸ்தபதிகள் ஈடுபட்டனர். மறு சீரமைப்புக்கான மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது.ஆனால், அதன்பிறகும் எந்த பணியும் நடைபெறவில்லை. மறு சீரமைப்புக்கான மதிப்பீடு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்து, பணிகளை தொடங்க இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் அனுமதி அளிக்காமல் கிடப்பில் போட்டிருப்பதாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் கோயிலில் ஆய்வு செய்த மாவட்ட நீதிபதி மகிழேந்தி, தங்கத் தேர் எதற்காக பயன்பாடின்றி நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று விசாரித்தார். ஆனால், அதற்கான காரணங்களை தெளிவுபடுத்த முடியாமல் கோயில் நிர்வாகம் திணறியது. மறு சீரமைப்புக்கு மதிப்பீடு தயாரித்து அனுப்பியும், அறநிலைத்துறை அமைதி காப்பது எதனால் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.எனவே, கடந்த 2015ம் ஆண்டு முதல் சுவாமி திருவீதியுலாவுக்கு பயன்படாமல், நிலை நிறுத்திய இடத்திேலயே பாழுதாகி வரும் தங்கத் தேர், மீண்டும் வலம் வருவதற்கான நடவடிக்கையை அறநிலையத்துறையும், கோயில் நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும் என்பது பக்தர்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்