SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நீர்வடிப் பகுதி மேலாண்மை திட்டத்தில் விவசாயிகளுக்கு உபகரணங்கள்

9/12/2018 12:24:04 AM

திருத்தணி, செப். 12 :  திருத்தணி அடுத்த பீரகுப்பம்  கிராமத்தில் ஒருங்கிணைந்த நீர் வடிப் பகுதி திட்டத்தின் பயிற்சியை தொடங்கி  வைத்து விவசாயிகளுக்கு உபகரணங்களை எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன் வழங்கினார்.திருத்தணி அருகே பீரகுப்பம் கிராமத்தில் ஒருங்கிணைந்த நீர் வடிப் பகுதி மேலாண்மை திட்டம் மூலமாக கிராம விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் வேதவள்ளி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு உபகரணங்களை வழங்கினார். வி.கே.என். கண்டிகை, பீரகுப்பம், கார்த்திகேயபுரம், வேலஞ்சேரி, எஸ். அக்ரஹாரம், வீரகநல்லூர், பட்டாபிராமாபுரம் உள்ளிட்ட 8 கிராமங்களுக்கு விசைத்தெளிப்பான் 52, தார்பாலின் 125, பண்ணைக் கருவிகள் 445 ஆகிய உபகரணங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. திட்ட வளர்ச்சி அணி உறுப்பினர் ஜி.கோபிநாத், பொறியாளர் சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சியில் பயிற்றுனர் ஜெ.இ.கென்னடி பயிற்சியளித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்