SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கிடப்பில் மேம்பால கட்டுமான பணி உயிர் பலிவாங்கும் சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை

9/12/2018 12:23:43 AM

திருவள்ளூர், செப். 12: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்கும் நிறுவனம், தேவையான அடிப்படை வசதிகளை செய்யாததாலும், இரு மேம்பாலங்கள் கட்டும் பணி நிலுவையில் உள்ளதாலும், அடிக்கடி சாலை விபத்து ஏற்பட்டு, உயிர்பலி உண்டாகிறது.தமிழகத்தில், சென்னை முதல் திருப்பதி வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சாலையை பராமரிக்கும் தனியார் நிறுவனங்கள் 40 கி.மீ., தூரம் இடைவெளியில் ‘டோல்கேட்’ அமைத்து வாகனங்களுக்கு வரி வசூல் செய்கின்றது. இவ்வாறு 20 முதல் 22 ஆண்டுகள் வரை வாகன வரி வசூல் செய்து கொள்ள மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் சில அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒப்புதலோடு அனுமதி பெற்றுள்ளனர்.
இவ்வாறு வசூல் செய்யும் தொகையில் சாலை பராமரிப்பு மட் டுமின்றி, தேவையான இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் மின் விளக்குகள் அமைத்தல், சாலை ஓரங்களில் குடிநீர் தொட்டிகள் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்தல் மற்றும் வாகன ஓட்டிகள் தங்குவதற்காக ஓய்வு இல்லங்கள் அமைத்து பராமரித்தல் உள்ளிட்டவைகளை இந்த நிறுவனங்கள் செய்ய வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகள் ஏற்படும்போது, இந்த நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் பணியினையும் இந்த தனியார் நிறுவனங்கள் செய்ய வேண்டும்.
ஆனால் தற்போது தேசிய நெடுஞ்சாலையை பராமரித்து வரும் தனியார் நிறுவனங்கள், வாகனங்களுக்கான கட்டணங்களை வசூலிப்பதில் மட்டுமே குறியாக செயல்படுகின்றன. வாகன ஓட்டிகளுக்கு குறிப்பிட்ட இடங்களில் மின் விளக்கு, கழிப்பிடங்கள் மற்றும் போதிய குடிநீர் வசதி செய்வதில்லை. குடிநீர் சப்ளை இல்லாததால் நீண்ட தூரம் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர்.மேலும், திருவள்ளூர் முதல் திருத்தணி பொன்பாடி சோதனைச்சாவடி வரை நாள்தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. இச்சாலையில் நாராயணபுரம், பட்டறைபெரும்புதூர் ஆகிய பகுதிகளில் உள்ள தரைப்பாலம் அருகே கடந்த மூன்று ஆண்டுகளாக மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் நிலுவையில் உள்ளது.

இதனால், கடந்த 2015ம் ஆண்டு டிசம்பரில் பெய்த கனமழையின் போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வாகன போக்குவரத்து 20 நாட்களுக்கு மேல் தடைபட்டது. தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள், மேற்கண்ட இடங்களில் குறுகிய தரைப்பாலத்தில் செல்லும்போது பல்வேறு விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட விபத்துகளில் மட்டும், 50க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். சாலையின் இடையே மைய தடுப்புகள் இல்லாததால், வாகனங்கள் கட்டுக்கடங்காத வேகத்தில் வருவதால், விபத்துக்கு உள்ளாகின்றன.அதோடு, சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. அதையும் பேட்ச் ஒர்க் செய்வதில்லை. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து ரத்த காயங்களுடன் வீடு செல்கின்றனர். சாலையோரம் இரும்பு தடுப்புகளை மீறி மரங்கள் வளர்ந்து அதன் கிளைகள் நீட்டிக்கொண்டு இருக்கின்றன. இதனாலும் விபத்துகள் ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது. எனவே, மனித உயிர்களுக்கு எமனாக இருக்கும் என்.எச்., ரோட்டில் உள்ள பட்டறைபெரும்புதூர், நாராயணபுரம் பகுதியில், விபத்துகளை தடுக்கும் வகையில் அரை குறையாக நிலுவையில் உள்ள இரண்டு மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 15-01-2019

  15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • MakarSankrantiFestival

  வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

 • 14-01-2019

  14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 13-01-2019

  13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 12-01-2019

  12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்