SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண் கஞ்சா வியாபாரிக்கு 356 நாள் சிறை தண்டனை

9/12/2018 12:23:19 AM

சென்னை, செப். 12: மனம் திருந்துவதற்கான ஒப்பந்தத்தை மீறியதால் பெண் கஞ்சா வியாபாரிக்கு 356 நாள் சிறை தண்டனை விதித்து போலீஸ் துணை கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் மோகனா (50). கஞ்சா வியாபாரி. கஞ்சா வழக்குகளில், பலமுறை சிறை சென்று வந்துள்ளார். கடந்த ஜூலை மாதம், அடையாறு துணை கமிஷனர் செஷன்சாய் முன்னிலையில் மோகனா ஆஜராகி, ‘‘இனிமேல் எவ்வித குற்றச்செயலிலும் நான் ஈடுபட மாட்டேன்’’ என்று, 110 விதியின் கீழ் எழுதி கொடுத்துவிட்டு மனம் திருந்துவதாக, உறுதியளித்து வந்தார். நேற்று மோகனா தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, அதேபகுதியை சேர்ந்த போலீஸ் இன்பார்மர் சரவணன் (35) என்பவரை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சரவணன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் மோகனாவை பிடித்து கைது செய்து துணை கமிஷனர் முன்பு ஆஜர்படுத்தினர்.இதையடுத்து மனம் திருந்துவதாக உறுதி அளித்து கொடுத்த ஒப்பந்தத்தை மீறியதால், அவரை 356 நாள் சிறையில் அடைக்க போலீஸ் துணை கமிஷனர் உத்தரவிட்டார். எனவே போலீசார் மோகனாவை புழல் சிறையில் அடைத்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்