SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

7வது ஊதிய குழு பரிந்துரையை பின்பற்ற கோரி டாக்டர்கள் பணியை புறக்கணித்து போராட்டம்

9/12/2018 12:22:58 AM

சென்னை, செப். 12: சென்னை, ஸ்டான்லி மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி மருத்துவமனை வளாகத்தில் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடு
பட்டனர்.7வது ஊதிய குழு பரிந்துரைப்படி மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வலியுறுத்தி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள் நேற்று மதியம் மருத்துவமனை வளாகத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். அப்போது மாநில அரசுக்கு எதிரான அவர்கள் கோஷம் எழுப்பினர்.இதுகுறித்து மருத்துவர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:
7வது ஊதிய குழு பரிந்துரையை பின்பற்றாததால் ₹20 ஆயிரம் முதல் ₹80 ஆயிரம் வரை டாக்டர்கள் குறைவான ஊதியம் பெறுகின்றோம்.
இதனால் கடந்த 10 ஆண்டுகளில் ₹1 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவர்கள் இரவு, பகல் பார்க்காமல், நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கின்றனர். எனவே எங்களது வேலைக்கான ஊதியத்தை மட்டுமே நாங்கள் கேட்கிறோம். சம்பள உயர்வு கோரிக்கை நியாயமானது. இதுவரை நோயாளிகள் பாதிக்காத விதமாக போராடி வருகிறோம். ஆனால், அரசு எங்கள் கோரிக்கையை கண்டுகொண்டதாக தெரியவில்லை.எனவே வருகின்ற 21ம் தேதி தமிழகம் முழுவதும் 18 ஆயிரம் மருத்துவர்கள் பணிகளை புறக்கணித்து ஒருநாள் அடையாள போராட்டத்தை நடத்த உள்ளோம். அரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மத்திய அரசுக்கு இணையான ஊதிய உயர்வை உடனடியாக எங்களுக்கு வழங்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்