SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதுராந்தகத்தில் கடந்த ஒருவாரமாக அறிவிக்கப்படாத திடீர் மின்தடை

9/12/2018 12:21:19 AM

மதுராந்தகம், செப்.12: மதுராந்தகத்தில் கடந்த ஒருவாரமாக காலை, மாலை நேரங்களில் தினமும் 3 மணி நேரம் வரை திடீர் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம், மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், அச்சிறுப்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த ஒரு வாரமகாக காலை, மாலை நேரங்களில் அறிவிக்கப்படாத திடீர் மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக அதிகாலை 5 மணி முதல் 7 மணிக்குள் வரையும், மாலையில் 6 மணி முதல் 7.30 மணி வரையும் திடீர் மின்தடை ஏற்படுகிறது.இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொசுக்கடியால் கடும் அவதியடைகின்றனர். காலாண்டு தேர்வு தொடங்கியுள்ள நேரத்தில், பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர். எவ்வித அறிவிப்பும் இல்லாமல் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டால் முறையாக எந்த பதிலும் அளிப்பதில்லை. ஒரு பக்கம் மின்மிகை மாநிலம் என்று பெருமை பேசிக்கொள்ளும் மின்துறை அமைச்சர் இதுபோன்ற அறிவிக்கப்படாத மின்வெட்டுகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்