SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வேலைக்காரி தலைமையில் நகை கொள்ளை : முகமூடி வாலிபர்கள் மதுரையில் சுற்றி வளைத்து கைது

9/12/2018 12:20:40 AM

சென்னை, செப்.12: வங்கி மேலாளர் வீட்டில் 133 சவரன் நகையை கொள்ளையடித்த வீட்டு வேலைக்காரி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நகை, செல்போன், பட்டாக்கத்தியை பறிமுதல் செய்தனர்.பல்லாவரம், கார்டன் உட்ராப் நகர், முதல் தெருவை சேர்ந்தவர் யோகசேரன் (56), தி.நகரில் உள்ள தனியார் வங்கி மேலாளர். இவரது மனைவி சுப்புலட்சுமி (50). இவர்களது மகள் காவியா. திருமணமாகி சென்னையில் கணவர் வீட்டில் வசிக்கிறார்.கடந்த வாரம் யோகசேரனின் சொந்த ஊரான மதுரையில் உறவினரின் திருமண நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொள்வதற்காக சுப்புலட்சுமி, வங்கி லாக்கரில் வைத்திருந்த 133 சவரன் நகைகளை வீட்டுக்கு கொண்டு வந்தனர். பின்னர், திருமண நிகழ்ச்சிக்கு  சென்று வந்ததும், மீண்டும் வங்கி லாக்கரில் வைப்பதற்காக, அதை பையில் போட்டு, பீரோவில் வைத்தார்.

இந்நிலையில், கடந்த 9ம் தேதி  மாலை 5 மணிக்கு முகமூடி அணிந்த 5 பேர், யோகசேரன் வீட்டுக்கு திடீரென நுழைந்தனர். அங்கிருந்த யோகசேரன், அவரது மனைவி சுப்புலட்சுமி, வீட்டு வேலைக்கார பெண் மகாராணி (51) ஆகியோரை கத்திமுனையில் மிரட்டி, சரமாரி தாக்கி, சணல் கயிற்றால் கட்டிப் போட்டனர். பின்னர், பீரோவில் இருந்த 133 சவரன் நகைகளை கொள்ளையடித்து, கதவை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு தப்பினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டனர்.
புகாரின்படி பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, வீட்டு வேலைக்காரி மகாராணி மீது தாக்குதல் நடத்தவில்லை. அவரது செல்போனை மட்டும் கொள்ளையர்கள் பறித்து சென்றது தெரிந்தது. அவரிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனால், சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர்.
அதில், யோகசேரனின் மனைவி கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவரை கவனித்து கொள்வதற்காக மகள் காவியா மதுரையை சேர்ந்த மகாராணியை வேலைக்கு சேர்த்தார். சுப்புலட்சுமியிடம் நம்பிக்கை பெறவேண்டும் என்பதற்காக மகாராணி, அவரை மிகவும் பரிவுடனும் பாசத்துடனும் கவனித்து கொண்டார்.அவருடைய உபசரிப்பில் மயங்கிய சுப்புலட்சுமி, தங்களது சொத்து மற்றும் நகைகள் குறித்த விவரங்களை மகாராணியிடம் கூறியுள்ளார். சுப்புலட்சுமியிடம் அதிகளவில் நகைகள் இருப்பதை அறிந்ததும், அதை கொள்ளையடிக்க மகாராணி திட்டமிட்டார். அதற்காக தனது உறவினர் நாகப்பட்டினம் வெளிபாளையம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியை சேர்ந்த அருண்குமார் (30), என்பவருடன் திட்டம் தீட்டி னார். அதன்பேரில், அருண்குமார் தனது நண்பர்கள் மதுரையை சேர்ந்த செல்வம் (28), சுரேஷ் (26), உசிலம்பட்டியை சேர்ந்த கவுதம் (21) ஆகியோரை கடந்த சில தினங்க்களுக்கு முன்பு சென்னைக்கு வரவழைத்தார். அவர்கள் மீது சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக சென்னை கீழ்க்கட்டளை, குரோம்பேட்டை ஆகிய பகுதிகளில் கூலி வேலை செய்து வந்தனர். கொள்ளையடிப்பதற்கான சந்தர்ப்பத்தை அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதையொட்டி மகாராணி, அங்கு நடக்கும் விஷயங்களை அருண்குமாருக்கு செல்போன் மூலமாக தகவல் கொடுத்தார்.

அதன்படி, கடந்த 9ம் தேதி நகைகளை கொள்ளையடிக்க சரியான சமயம் என முடிவு செய்த மகாராணி, உடனடியாக அருண்குமாருக்கு தகவல் கொடுத்தார். அரைமணி நேரத்தில் கொள்ளையடித்துவிட்டு தப்பிக்க வேண்டும் என அறிவுரையும் கூறியுள்ளார்.
அவரது ஆலோசனைப்படி, சம்பவத்தன்று  யோகசேரன் வீட்டில் புகுந்த 4 பேர், யோகசேகரன், சுப்புலட்சுமியை கயிற்றால் கட்டிப்போட்டு 133  சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். மகாராணியின் செல்போனையும் பறித்துக் கொண்டு ஓடிவிட்டனர் என மகாராணி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர்.அவர் கொடுத்த தகவலின்படி தனிப்படை அமைத்து போலீசார், மதுரை விரைந்தனர். நேற்று முன்தினம் மதுரை - கோயமுத்தூர் சாலையில் ஒரு  டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டிருந்த அருண்குமார் மற்றும்கூட்டாளிகளை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.பின்னர் அவர்களை மதுரை கரிேமடு காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். அதில், அவர்களிடம் இருந்து 124 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மீதமுள்ள 9 சவரன் நகையை கோயம்புத்தூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து ₹90 ஆயிரம் வாங்கி, ஜாலியாக செலவு செய்தனர் என தெரிந்தது. மேலும் அவர்களிடம் இருந்து 3 விலை உயர்ந்த செல்போன்கள், 2 பட்டா கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களை சென்னை அழைத்து வந்த போலீசார், இதேபோல் வேறு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2018

    25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்