SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ெபட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஓரத்தநாட்டில் பேரணி, மறியல்: எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்பட 500 பேர் கைது

9/12/2018 12:19:28 AM

ஓரத்தநாடு,செப்.12: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி ஒரத்தநாடு ஒன்றிய திமுக செயலாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான மு.காந்தி தலைமையிலும் காங்கிரஸ் கட்சியின்  வட்டாரத்தலைவர் சதாசிவம், திராவிடர் கழக நிர்வாகிகள் ஜெகநாதன், அரசு, இளங்கோ மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பூவத்தூர் பாஸ்கர், மண்டலக்கோட்டை துரைராஜ், புதூர் கோவிந்தராஜ், ஆகியோர் முன்னிலையிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம், மதிமுக உள்ளிட்ட கட்சியினர் ஒரத்தநாடு பைபாஸ் சாலையிலிருந்து புறப்பட்டு தஞ்சை செல்லும் மெயின் ரோட்டில் பேரணியாக வந்தனர். பின்னர் தஞ்சையிலிருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த பஸ் மற்றும் லாரிகளை மறியல் செய்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பட்டுக்கோட்டை - தஞ்சை மெயின் ரோட்டில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் கொண்டு சென்று அடைத்தனர். ஒரத்தநாடு அண்ணா சிலைக்கு வந்து மறியலில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏ ராமச்சந்திரனும் கைது செய்யப்பட்டார். போராட்டத்தில் ஒரத்தநாடு மேற்கு  ஒன்றிய செயலாளர் செல்வராஜ், முன்னாள் ஒன்றிய செயலாளர்  தியாக. இளங்கோ,  கண்ணுக்குடி அப்பாத்துரை, திருமங்கலக்கோட்டை சின்னையன், ரெத்தினகுமார், தொண்டராம்பட்டு  முருகையன், ஒரத்தநாடு ஆர்.வி.நகர் மணிவண்ணன், கண்ணை நாதன். செல்வராஜ்  மற்றும் சசி, ஒரத்தநாடு பாரதி, நெடுவாக்கோட்டை முருகையன், இளைஞரணி  அப்பாத்துரை, ஆம்பல். குடிக்காடு உத்திராபதி, குலமங்கலம் அண்ணாத்துரை, வெள்ளூர் கவிநாதன், முன்னாள் கவுன்சிலர் அக்ரோ ஜெயபால், புலவன்காடு தமிழேந்தி, உறந்தைராயன் குடிக்காடு தமிழன்,  கண்ணுக்குடி சூர்யபிரகாசம், திராவிட. கதிரவன், ஆம்பல் நேதாஜி, வடசேரி ஞானசேகரன்,

ராஜா நந்தகுமார், இளைஞரணி அமைப்பாளர் தெலுங்கன் குடிக்காடு  கார்த்திக்கேயன்,  தென்னமநாடு ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி ஒரத்தநாடு மற்றும் பாப்பாநாடு, திருவோணம் பகுதிகளில் வர்த்தகர்களும், பொதுமக்களும் தாங்களாகவே கடைகளை அடைத்தனர்.  திருவோணம்: இதேபோல் திருவோணம் பகுதி ஊரணிபுரம் கடைத்தெருவில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள்  திமுக எம்எல்ஏ மகேஷ் கிருஷ்ணசாமி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சின்னத்துரை மற்றும் வீரப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவிந்தராஜ், காங்கிரஸ் வட்டார தலைவர் முத்து உள்ளிட்ட சுமார் 75 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 17-07-2019

  17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • DongriBuildingCollapse

  மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

 • KyrgyzstanSlapping

  ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

 • ChangchunZoologicalPark

  உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

 • 16-07-2019

  16-072019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்