SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தாம்பரம் ரயில் நிலையத்தில் தம்பதி தவற விட்ட 60 சவரன் ஒப்படைப்பு

9/12/2018 12:19:24 AM

தாம்பரம், செப். 12: தாம்பரம் ரயில் நிலையத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி சென்ற தம்பதி, தவற விட்ட 60 சவரனுடன் கூடிய பையை ரயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு, அவர்களிடம் ஒப்படைத்தனர்.தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே செம்பாக்கம் ராணி ரெசிடென்சி பகுதியை சேர்ந்தவர் ஜெபவேல்ராஜ் (32). நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலி செல்ல மனைவியுடன் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற, தாம்பரம் ரயில் நிலையத்தின் 7வது நடைமேடைக்கு வந்தார்.அங்கு, ரயிலில் அவசரமாக ஏறும்போது, 60 சவரன் நகையுடன் வைத்திருந்த கைப்பையை தவற விட்டு ரயிலில் ஏறி விட்டனர். ரயிலில் ஏறியவுடன் கைப்பையை தவற விட்ட விஷயம் தெரிந்து உடனே ரயில்வே பாதுகாப்பு படை அவசர உதவி எண் 182க்கு தகவல் தெரிவித்தார்.பின்னர் கணவன், மனைவி இருவரும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து ரயில் மூலம் மீண்டும் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.இதற்கிடையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர், பையை பாதுகாப்பாக எடுத்து தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படை நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அந்த பையில் 60 சவரன் தங்க நகைகள், ₹2560 பணம், செல்போன், ஏடிஎம் கார்டுகள், விலை மதிப்புள்ள ஆவணங்கள் இருந்தன.  இந்நிலையில், பையை தேடி வந்த ஜெபவேல்ராஜிடம் தாம்பரம் ரயில்வே போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் பையை ஒப்படைத்தனர். ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு நன்றி கூறி, நகை பையை பெற்றுச் சென்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்