SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கஞ்சா விற்ற முதியவர் கைது

9/12/2018 12:18:35 AM

வேளச்சேரி, செப்.12: தரமணி எஸ்ஆர்பி டூல்ஸ் பஸ் நிறுத்தம் அருகே தரமணி போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி ஒருவர் நின்றிருந்தார்.போலீசார் அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். பின்னர் போலீசார் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தபோது, சிறு சிறு பொட்டலமாக கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை, காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
அதில், துரைப்பாக்கம், கண்ணகி நகரை சேர்ந்த சுப்பிரமணி (எ) சொரி மணி (64). கஞ்சாவை வட மாநில ஐடி ஊழியர்களுக்கு விற்பனை செய்தது தெரிந்தது. அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

  • church_cathdral11

    நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

  • apolo_50vinkalam1

    நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்