SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ.80 கோடி மதிப்பு சிலை கடத்தல் வழக்கு 12 பேர் கோர்ட்டில் ஆஜர்: 25ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

9/12/2018 12:17:43 AM

கும்பகோணம், செப். 12: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகில் சவுந்தரியபுரம் ஆதிகேசவ பெருமாள் கோயில், பையூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்,  சுங்குவார் சத்திரம் அருகே ராமானுஜபுரம் மணிகண்டேஸ்வரர் கோயில்களில் கடந்த 2015ம் ஆண்டு சிவன், பார்வதி சிலை, ஆதிகேசவ பெருமாள் சிலை, இரு பூதேவி சிலைகள், இரு ஸ்ரீதேவி சிலைகள், பிரசன்ன வெங்கடேச பெருமாள் சிலை, சக்கரத்தாழ்வார் ஆகிய ரூ.80 கோடி மதிப்பிலான எட்டு ஐம்பொன் சிலைகள் காணாமல் போனது.இந்த சிலைகளை கடந்த 14.5.2015 அன்று சென்னை மேற்கு மாம்பலத்தில் தனலிங்கம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றபோது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன்மாணிக்கவேல் மடக்கி பிடித்தார். பின்னர் சிலைகளை கைப்பற்றி தனலிங்கத்தை கைது செய்தார்.

இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஏற்று விசாரணை நடத்தியதில்  15 பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இந்த வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே உள்ள  மாரீஸ்வரன், சண்முகம், ஜாய்சன் சாந்தகுமார், தமீம் பாட்ஷா, சபரிநாதன், தனலிங்கம், கோகுல் பிரகாஷ், திரைப்பட இயக்குநர் வி.சேகர், பார்த்தீபன் ஆகியோரும், சிறையில் உள்ள ஜெயக்குமார், விஜயராகவன், முஸ்தபா உள்ளிட்ட  12 பேரும் நேற்று  கும்பகோணம் கோர்ட்டில்  ஆஜராகினர். இவ்வழக்கில் தொடர்புடைய ராஜசேகர், சண்முகநாதன், சுப்பிரமணியன் ஆகிய மூவரும் நேற்று கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி அய்யப்பன்பிள்ளை வரும் 25ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்திரவிட்டார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • kedarnath

  கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

 • JadeMineMyanmar

  மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

 • protestsdan

  மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

 • sachinbday

  46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

 • fingersgirl

  அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்