SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சாலையில் உருண்டு புரண்டு பொதுமக்கள் நூதன போராட்டம்

9/12/2018 12:15:39 AM

கூடுவாஞ்சேரி, செப்.12: கூடுவாஞ்சேரியில் இருந்து ஊரப்பாக்கம் - நல்லம்பாக்கம் சாலை, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொடங்கி, வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் இணைகிறது. காட்டூரில் இருந்து அருங்கால் வரை 700 மீட்டர் கொண்ட சாலையில், நல்லம்பாக்கத்தில் இருந்து ஊனைமாஞ்சேரி கிரஷர் பகுதி வரை 2 கி.மீ கொண்ட சாலை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ளது.
இதனால், ஊராட்சி மூலம் 2 மடங்கு இடம் ஒதுக்கினால், நெடுஞ்சாலைத்துறைக்கு சாலை அமைக்க அனுமதி கொடுப்போம் என கூறி வனத்துறை முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதன் காரணமாக சேதமடைந்த சாலையில் தினமும் மக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கண்ட சாலையை சீரமைக்க வலியுறுத்தி பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அருங்கால் - காட்டூர் சாலையில் திரண்டனர்.சாலையை சீரமைக்க, கடவுளுக்கு கோரிக்கை வைக்கும் வகையில் சாமி படங்களை வைத்து பூஜை செய்தனர். பின்னர், பெண்கள் பட்டை அடித்தும், ஆண்கள் நாமம் போட்டும் அங்கபிரதட்சனம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், கடந்த ஓராண்டாக இந்த சாலையில் பஸ் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் காரனைப்புதுச்சேரி, காட்டூர் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து தமிழக முதல்வர், வனத்துறை அமைச்சர், எம்பி, மாவட்ட கலெக்டர் உள்பட பல்வேறு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தோம். உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில், கடந்த ஜனவரி மாதம் அதிகாரிகள் மேற்கண்ட இடத்தை ஆய்வு செய்து, சாலை அமைப்பதாக உறுதியளித்து சென்றனர். ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

  • keralanunprotest

    பிஷப் பிராங்கோவை கைது செய்யாததை கண்டித்து கேரளாவில் கன்னியாஸ்திரிகள் போராட்டம்

  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்