SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறப்பு குழு மூலம் ஆய்வு செய்து நவீன தொழில்நுட்ப முறையில் அணைகளை பலப்படுத்த வேண்டும் தமிழ்நாடு விவசாய சங்கம் வலியுறுத்தல்

9/12/2018 12:15:23 AM

திருச்சி, செப்.12: தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர்  கூட்டத்தில் சிறப்பு குழு மூலம் ஆய்வு செய்து அணைகளை நவீன தொழிற்நுட்ப முறையில் பலப்படுத்திடவேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தமிழ்நாடு விவசாய சங்கத்தின்  மாநில நிர்வாக குழு மற்றும் மாவட்ட செயலாளர் கூட்டம் திருச்சி பெரிய மிளகு பாறையில் நடந்தது. மாநில தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். மாநில பொதுசெயலாளர் துரைமாணிக்கம் வேலை அறிக்கை மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி பேசினார். கூட்டத்தில் ஒரு போக சம்பாவை பாதுகாத்திட உரிய அளவு காவிரிநீரை, கடைமடை வரை வழங்கிடவேண்டும், மூன்றுமுறை மேட்டூர் அணை நிரம்பியும் சுமார் 180 டி.எம்.சி தண்ணீர்; திறந்துவிடப்பட்டும் காவேரி டெல்டா பாசனத்திற்கும் ஏரி, குளம், நீர் நிலையங்களில் தண்ணீரை நிரப்புவதற்கும் பொறுப்பான நடவடிக்கை எடுக்காது கொள்ளிடத்தில் கூடுதல் நீரை வெளியேற்றி முக்கொம்பு அணை உடைவதற்கு காரணமான தமிழக அரசையும், பொதுப்பணிதுறையையும் கண்டிக்கிறோம்.

காவிரியில் தேவையான அளவு தண்ணீரை திறந்துவிடுவதுடன் கடை மடை வரை தண்ணீர் செல்வதை உறுதி செய்திடவேண்டும், பாதிக்கப்பட்ட விதைகளுக்கு பதில் முழு மானியத்தில் நெல் விதைகள் வழங்கிடவேண்டும்.
மேலும் வடக்கிழக்கு பருவமழையில் வரும் வெள்ள நீரையும் தாங்கும் திறனில் நவீன சாதனங்களை கொண்டு முக்கொம்பு மேல்அணையை பலப்படுத்திட வேண்டும்.    தமிழக அணைக்கட்டுகளை விரைந்து பாதுகாக்கவேண்டும்.
காவிரியில் எல்லாவகையிலும் பாதுகாப்பான மணலை மாநில அரசும் ஆளுங்கட்சியும் அளவின்றி களவாடியதால் அணைகள் பலவீன பட்டுவிட்டது. எனவே உடனடியாக தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் தடைசெய்திடவேண்டும்,  கட்டுமான பணிகளுக்கான மணலுக்கு மாற்று ஏற்பாடு செய்திடவேண்டும், அணைகளை சிறப்பு குழு மூலம் ஆய்வு செய்து நவீன தொழிற்நுட்ப முறையில் பலப்படுத்திடவேண்டும். குறிப்பிட்ட இடங்களில் படுக்கை அணைகளிலும் கதவு அணைகளிலும் அமைத்திடவேண்டும்.

ஆந்திர அரசு பாலாற்றில் பெரும் பள்ளம் பகுதியில் உயர்த்தி கட்டியுள்ள தடுப்பணையை அகற்றிட வேண்டும். பாலாறு நீர் பிடிப்பு பகுதியில் தமிழக அரசின் முன் அனுமதிபெறாமல் கட்டுமான பணிகளை செய்வது தமிழ்நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயலாகும். ஆகவே மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பெரும்பள்ளம் பகுதியில் உயர்த்தி கட்டியுள்ள அணையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.    மத்திய அரசு அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்திட வலியுறுத்தியும்  தமிழக அரசு தடுப்பதற்கான நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் வரும் செப்டம்பர் 28 அன்று நாகை மாவட்டம் மயிலாடு துறையிலும் கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்பாட்டம் நடத்துவது.

மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரலாறு காண விலைஉயர்வை கட்டுப்படுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  கூட்டத்தில் மாநில துணை செயலாளர்கள் மாசிலாமணி, இந்திரஜித், நல்லையா, மாநில  துணைத்தலைவர்கள் பெருப்படையார். துளசிமணி, மாநில நிர்வாக குழு  உறுப்பினர்கள் சிவசூரியன், சம்மந்தம், ஜெயக்குடி, முல்லை, நாராயணசாமி,  கருணாநிதி, கசமுத்து, மாதவன், ராமசாமி, காசிவிஸ்வநாதன், ரெங்கராஜன்,  சுப்பிரமணியன், சின்னச்சாமி, தெய்வசிகாமணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்