SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மொபட்டை இடித்து தள்ளி மூதாட்டியிடம் 10 சவரன் பறிப்பு

9/12/2018 12:13:50 AM

திருப்போரூர், செப். 12: கேளம்பாக்கம் அருகே புதுப்பாக்கத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை சேர்ந்த முத்து கருப்பன். இவரது மனைவி வசந்தா (60).நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் வசந்தா, தனது உறவினர் கவிதா என்பவருடன் பொருட்கள் வாங்க மொபட்டில் கேளம்பாக்கத்துக்கு புறப்பட்டனர். அப்போது, ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த 2 பேர், அவர்களை பின்தொடர்ந்து செனற்னர்.அதை பார்த்து அச்சமடைந்த கவிதா, மொபட்டை வேகமாக ஓட்டினார். இதனால், பைக் ஆசாமிகளும் வேகமாக பின்தொடர்ந்து சென்று, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மொபட்டை இடித்து தள்ளினர்.
இதில் 2 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். உடனே பைக் ஆசாமிகள், வசந்தா கழுத்தில் இருந்த 10 சவரன் நகையை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.புகாரின்படி கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்