SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து கல்லூரி மாணவன் படுகாயம்

9/12/2018 12:12:52 AM

சென்னை, செப். 12: சென்னை கொருக்குப்பேட்டையில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து கல்லூரி மாணவன் படுகாயம் அடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, காற்றாடியை விட்டது யார்? என்று விசாரிக்கின்றனர்.சென்னை தண்டையார்பேட்டை அடுத்த கொருக்குப்பேட்டை ஹரிநாராயணபுரத்தை சேர்ந்தவர் நாராயணன் (46). இவரது மகன் அரிகிருஷ்ணன் (19). மீஞ்சூர் தனியார் கல்லூரி மாணவர். நேற்று முன்தினம் கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் சென்று, அங்கிருந்து பைக்கில் வீட்டுக்கு வந்தார்.அப்போது, அந்த பகுதியில் பறந்து வந்த மாஞ்சா நூல், அரிகிருஷ்ணனின் கழுத்தைஅறுத்தது. இதில் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் அரிகிருஷ்ணன், பைக்குடன் விழுந்தார்.
உடனடியாக அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.புகாரின்படி ஆர்.கே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காற்றாடியை பறக்க விட்டவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

  • train18modi

    டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்