SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

திருத்தணி அருகே பரபரப்பு : கோயில் பூட்டை உடைத்து அம்மன் நகைகள் கொள்ளை

9/12/2018 12:12:21 AM

சென்னை, செப். 12: திருத்தணி அடுத்த அரும்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வழக்கமான பூஜை முடிந்ததும் பூசாரி முரளி (எ) அங்கநாதன் கோயிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை வழக்கம் போல் பூஜை செய்வதற்காக கோயிலை திறக்க வந்தார்.அப்போது கோயிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு  திறந்து கிடந்ததை பார்த்து திடுக்கிட்டார். உடனே ஊர் கிராம பொதுமக்களிடம் இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது. கிராம மக்கள் அங்கு சென்று பார்த்தபோது அங்கிருந்த உற்சவர் அம்மன் சிலை கழுத்தில் அலங்கரித்து இருந்த 3 சவரன் தங்க செயின் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும், ₹10 ஆயிரம் மதிப்புள்ள பூஜை சாமான்களையும் மர்ம நபர்கள் அள்ளிச் சென்றது மட்டுமின்றி, அங்கிருந்த உண்டியலை உடைப்பதற்கு காலதாமதமாகும் என உணர்ந்த கொள்ளையர்கள் அதை அப்படியே தூக்கிச் சென்றனர். கடந்த அமாவாசை நாளில் திருவிழா நடந்த இந்த கோயிலில் பக்தர்கள் மூலம் காணிக்கையாக செலுத்திய சுமார் ₹30 ஆயிரம் இருக்குமென பக்தர்கள் கூறுகின்றனர்.
தகவலறிந்து கனகம்மாசத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே இதே கோயிலில் 2 முறை கொள்ளை  சம்பவம் நடந்துள்ளது. ஆனால், இதுவரை கொள்ளையர்கள் கைது செய்யப்படவில்லை என பக்தர்கள், ஊர் பொதுமக்கள் போலீசார் மீது குற்றம்சாட்டுகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mumbai_1010ganeshidole

  மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

 • sikimairportmodi

  சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

 • puppies_formation12345

  சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

 • philipines_landslidesaccid

  பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

 • tanzinaship_accid2121

  டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்