SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாம் தமிழர் கட்சி பிரமுகருக்கு சரமாரி இரும்பு ராடு அடி

9/12/2018 12:11:47 AM

கூடுவாஞ்சேரி, செப். 12: வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் மேம்பாலம் அருகில் வசிப்பவர் சஞ்சீவிநாதன் (39). நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் மவட்ட தென் மண்டல செயலாளர்.நேற்று காலை சஞ்சீவிநாதன், வழக்கம்போல் தனது சொந்த வேலை விஷயமாக பைக்கில் வெளியே சென்றார். பின்னர், தனது அலுவலகத்துக்கு திரும்பினார். ஊரப்பாக்கம் மேம்பாலத்தின் அருகில் சென்று தனது பைக்கை நிறுத்தினார். அப்போது அவரை, காரில் பின்தொடர்ந்து வந்த மர்மநபர்கள் திடீரென இரும்பு ராடு, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர்.இதில், அலறி கூச்சலிட்டபடி சஞ்சீவிநாதன் ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். பொதுமக்கள் திரண்டு வருவதை கண்டதும், மர்மநபர்கள் காரில் ஏறி தப்பிவிட்டனர்.
தகவலறிந்து கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்து உயிருக்கு போராடிய சஞ்சீவிநாதனை மீட்டு பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

  • sriramayanatrain

    புறப்பட்டது ஸ்ரீ ராமாயண எக்ஸ்பிரஸ் : புண்ணிய தலங்களில் 16 நாட்கள் சுற்றுலாப் பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்