SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பரங்கிமலை - பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டு : நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திமுகவினர் முற்றுகை போராட்டம்\

9/12/2018 12:11:13 AM

ஆலந்தூர், செப்.12: பரங்கிமலை - பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டு நிர்வாக சீர்கேட்டை கண்டித்து அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை பரங்கிமலை - பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டின் நிர்வாக சீர்கேட்டினை கண்டித்து பரங்கிமலையில் உள்ள அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.கன்டோன்மென்ட் நகர செயலாளர் டி.பாபு, ஆலந்தூர் பகுதி செயலாளர் பி.குணாளன், கவுன்சிலர் விஜயசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில், தா.மோ.அன்பரசன் எம்எல்ஏ பேசியதாவது, பரங்கிமலை - பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டுக்கு உட்பட்ட பரங்கிமலை நசரத்புரம், இந்திரா நகர், கலைஞர் நகர், பல்லாவரம் ஆடு தொட்டி பகுதிகளில் துப்புரவு தொழிலாளிகள், அப்பாவி மக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கின்றனர்.இங்குள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்ட மின்சார இணைப்புகளை துண்டித்து, அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். துப்புரவு தொழிலாளிகளுக்கான குடியிருப்பை கட்டி கொடுத்துவிட்டு பிறகு அப்புறப்படுத்த வேண்டும். துண்டிக்கப்பட்ட மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும். இல்லாவிட்டால், திமுக சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார்.பம்மல் வே.கருணாநிதி, திருநீர்மலை ஜெயக்குமார், கன்டோன்மென்ட் ம.மோகன், சி.முத்து, என்.வி.கருணாகரன், மணிவண்ணன், முன்னாள் கவுன்சிலர் தமிழ்செல்வி, பட்ரோடு சி.ராஜ், செங்கை மோகன், ராமுசங்கர், ராஜேந்திரன், தினகர், ராஜன், தியாகு, மணப்பாக்கம் அழகேசன், ஜெயபால், முனுசாமி, சத்யா, தீனதயாளன், வட்ட செயலாளர்கள் கருணாநிதி, செல்வேந்திரன், குப்புசாமி, சீனிவாசன் மற்றும் வழக்கறிஞர்கள் பாபு, முத்துமீரான், நெப்போலியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • russia_anumin111

  ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

 • largestpotato

  உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

 • marsgobi_desert1

  செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்