SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் மாவட்டத்தில் 50 சதவீத கடைகள் அடைப்பு

9/11/2018 5:26:35 AM

நாமக்கல், செப். 11: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காங்கிரஸ் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம், நாமக்கல் மாவட்டத்தில் நடத்தப்பட்டது.
மாவட்டத்தின் பல இடங்களில்  50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஓட்டல்கள், டீக்கடைகள், மருந்து கடைகள் வழக்கம் போல திறக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் அரசுமற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன.  ஆனால் ஆட்டோக்கள் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டது. மாநில லாரி உரிமையாளர்கள்  சம்மேளனம்,  மணல் லாரி உரிமையாளர்கள்சம்மேளனம் ஆகியவை முழு அடைப்பு போராட்டத்துக்கு  ஆதரவு தெரிவித்திருந்தன.
இதனால் மாவட்டத்தில் லாரிகள் இயக்கப்படவில்லை. இது போல ரிக் லாரி உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரிக் லாரிகளும் இயக்கப்படவில்லை.தமிழகம் முழுவதும் 1000 ரிக் லாரிகள் இயக்கப்படவில்லை. இது போல சுமார் 4 லட்சம் சரக்கு லாரிகளும், 75 ஆயிரம் மணல் லாரிகளும் இயக்கப்படாமல், ஆங்காங்கே நிறுத்திவைக்கப்பட்டது. மாலை 6மணிக்கு பின் இவை வழக்கம் போல இயக்கப்பட்டது.

ராசிபுரம்: பெட்ரோல், டீசல் விலையேற்றத்த கண்டித்து ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் கடைக்காரர்கள், வாகன ஓட்டுநர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ராசிபுரத்தில் காங்கிரஸ் கட்சி முன்னாள் மாவட்ட தலைவர் சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். முன்னாள் மாவட்ட  இளைஞரனி அமைப்பாளர் பாலு, இளைஞர் காங்கிரஸ் விநாயகமூர்த்தி. நகர தலைவர் முரளி, திமுக நகர செயலாளர் சங்கர், மாவட்ட இளைஞரனி அமைப்பாளர் ராஜேஸ்குமார், நகர செயலாளர்கள் மதிமுக ஜோதிபாசு, சிபிஐ மணிமாறன், சிபிஎம் ராஜகோபால், விசி ஆதவன் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், மற்றும் அமைப்பை ரே்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம்: பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்திய மத்திய அரசை கண்டித்து எதிர்கட்சிகள் நேற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடத்தின. பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் திரண்டு, அந்த வழியாக வந்த பஸ்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் திமுக ஒன்றிய பொறுப்பாளர் யுவராஜ், மாவட்ட பொருளாளர் குமார், மாவட்ட காங்கிரஸ் தலைவர் தனகோபால், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சதீஷ், வசந்தா பழனிசாமி, ஜலீல், இந்திய கம்யூனிஸ்ட் செல்வராஜ், மார்க்ஸிஸ்ட் அசோகன், திமுக நிர்வாகிகள் மாதேஸ், கதிர்வேல், ஜிம்செல்வம், செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • shadow_111

  பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

 • nigeriaaa_twins1

  இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

 • russia_anumin111

  ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

 • largestpotato

  உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

 • marsgobi_desert1

  செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்