SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஆசிரியர்கள் அதிர்ச்சி புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்ட 80 சதவீதம் கேள்விகள்

9/11/2018 5:26:26 AM

நாமக்கல், செப்.11: காலாண்டு தேர்வில் 80 சதவீதம் கேள்விகள் புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து கேட்கப்பட்டிருந்ததால் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் கலக்கமடைந்தனர். கேள்வித்தாளை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மாணவர்களை சமாதானப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர்.நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பிளஸ்1, பிளஸ்2 மாணவ, மாணவியருக்கு காலாண்டு தேர்வு துவங்கியது. பிளஸ்1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டத்திலும், பிளஸ்2வுக்கு  பழைய பாடத்திட்டத்திலும் தேர்வுகள் நடத்தப்படுகிறது. பிளஸ்2 வில் இதற்கு முன் இருந்த கேள்வித்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டு புதிய முறையில் கேள்வித்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக கேள்வித்தாள் வடிவமைப்பு பிளஸ்1, பிளஸ்2 என இரண்டு வகுப்புகளுக்கும், இதுவரை வெளியிடப்படவில்லை. இணையதளம், வாட்ஸ்அப் போன்றவற்றில் சில தனியார் ஆசிரியர் அமைப்பினர் கேள்வித்தாள் வடிவமைப்பை, கடந்த வாரம் வெளியிட்டனர். இதை வைத்துக்கொண்டு ஆசிரியர்கள் மாணவ, மாணவியருக்கு பயிற்சியளித்தனர்.

இதற்கு முன், புத்தகத்தின் பின்பகுதியில் உள்ள கேள்விகள் தான் தேர்வில் 95 சதவீதம் கேட்கப்படும். ஆனால், இந்த ஆண்டில் இருந்து அனைத்து கேள்விகளும் புத்தகத்தின் உள்பகுதியில் இருந்து தான் கேட்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் எந்த பாடத்தில் எங்கிருந்து கேள்விகள் வரும் என புரியாமல் ஆசிரியர்களும், மாணவர்களும் தவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பிளஸ்1, பிளஸ்2 தமிழ்தேர்வில், 80 சதவீத கேள்விகள் புத்தகத்தில் உள்பகுதியில் இருந்து தான் கேட்கப்பட்டிருந்தது. புத்தகத்தில் ஒவ்வொரு பாடத்திலும் இறுதியில் வெளியான ஒரு சில கேள்விகள் மட்டும் தேர்வில் கேட்கப்பட்டிருந்தது. இந்த வினாத்தாளை பார்த்து, அரசு பள்ளிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவ, மாணவியர் கலக்கம் அடைந்தனர். அவர்களை ஆசிரியர்கள் சமாதானப்படுத்தி தேர்வு எழுத வைத்தனர். கேள்வித்தாள் மாணவர்களுக்கு சற்று கடினமாக தான் இருந்திருக்கும் என முதுகலை ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து முதுகலை ஆசிரியர்கள் கூறியதாவது:

பிளஸ்1 வகுப்புக்கு, இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் மாணவர்களை மட்டும் இன்றி ஆசிரியர்களையும் மிரளச் செய்துள்ளது. ஒவ்வொரு பாடத்துக்கும் சுமார் 800 பக்கங்கள் கொண்டதாக புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இதில் காலாண்டு தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட பாடங்களை, பல பள்ளிகளில் நடத்தி முடிக்க முடியவில்லை. குறிப்பாக கணிதத்துக்கு காலாண்டு தேர்வுக்கு புதிய பாடத்திட்டத்தில் 6 சேப்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் 4 சேப்டர்களை கூட ஆசிரியர்களால் நடத்தி முடிக்க முடியவில்லை. ஒவ்வொரு சேப்டரிலும் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கணக்கும், வெவ்வேறு வடிவங்களில் உள்ளன. இதை மாணவர்களுக்கு புரிய வைக்கவும், பாடங்களை நடத்த போதுமான கால அவசாகம் இல்லை. அதற்குள் காலாண்டு தேர்வு வந்துவிட்டது.

பிளஸ்1 தமிழ், ஆங்கிலத்தில் 3 பாடங்கள் காலாண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  இந்த பாடங்கள் அனைத்தும் அதிக பக்கங்களை கொண்டதாகவும், ஏராளமான செய்திகளை உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளது. இந்த பாடங்களை ஆசிரியர்கள் வகுப்பில் நடத்தி முடித்தாலும், பாடங்கள் மாணவர்கள் மனதில் எந்த அளவுக்கு புரிந்துள்ளது என்பது சந்தேகம் தான். இயற்பியல், வேதியியல், உயிரியியல் போன்ற பாடங்களிலும் காலாண்டு தேர்வுக்கு உரிய பாடங்களை முடிக்க இயலவில்லை. 4500 பக்கங்கள் கொண்ட பிளஸ்1 பாடப்புத்தகத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும், மாணவ, மாணவியர் உள் வாங்கிக் கொண்டு அரசு பொதுத்தேர்வை எழுதுவதில் பல பிரச்னைகள் ஏற்படும். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennaipolicefunction

    சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற காவலர் நிறைவாழ்வு பயிற்சி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பங்கேற்பு

  • railwaysecurityforce

    சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையின் 33வது ஆண்டு விழாவில் வீரர்கள் அணிவகுப்பு

  • courtchennaispl

    சென்னையில் குற்றவழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் திறப்பு

  • russiapresigun

    ரஷ்ய ராணுவத்தின் புதிய துப்பாக்கி ரகங்களை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆய்வு

  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்