SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொலை வழக்கு விசாரணையில் திடீர் திருப்பம் கோகுல்ராஜூடன் நான் கோயிலுக்கு செல்லவில்லை

9/11/2018 5:26:15 AM

நாமக்கல், செப்.11: கொலை வழக்கு விசாரணையில் திடீர் திருப்பம், ேகாகுல்ராஜ் உடன் கோயிலுக்கு செல்லவில்லை என சுவாதி பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். இந்த வழக்கு விசாரணை 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த இன்ஜினியர் கோகுல்ராஜ்(24). கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி கொலை செய்யப்பட்டு, பள்ளிபாளையம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்தார். இந்த கொலை வழக்கில், சாட்சிகள் விசாரணை கடந்த 30ம் தேதி, நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடங்கியது. நேற்று 5வது நாளாக, மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணை நடந்தது. இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட சங்ககிரி தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜ், அவரது தம்பி தங்கதுரை, கார் டிரைவர் அருண் உள்பட 15 பேரை, போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அரசு தரப்பில் முக்கிய சாட்சியான நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே நடந்தையை சேர்ந்த சுவாதியிடம்(23) நேற்று விசாரணை நடைபெற்றது. அரசு சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி, சுவாதியிடம் சுமார் 3மணி நேரம் விசாரணை நடத்தினார்.

அப்போது, ஏற்கனவே போலீசாரிடம் சுவாதி அளித்த வாக்குமூலத்தை வைத்து, வரிக்கு வரி சிறப்பு வழக்கறிஞர் கருணாநிதி சுவாதியிடம் கேள்விகள் கேட்டு பதில் பெற்றார். கோகுல்ராஜ் உடன் சுவாதியின் பழக்கம் குறித்தும், 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயிலுக்கு கோகுல்ராஜ் உடன் சென்றது குறித்தும் பல கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு சுவாதி, ‘கோகுல்ராஜ் தான் படித்த கல்லூரியில் உடன் படித்தவர் என்ற முறையில் மட்டுமே தெரியும். அவருடன் வேறு எந்த பழக்கமும் எனக்கு கிடையாது. திருச்செங்கோடு மலைக்கோயிலுக்கு கோகுல்ராஜ் உடன் நான் செல்லவில்லை,’ என கூறினார். 3 மணி நேர விசாரணையில், அரசு வழக்கறிஞர் எழுப்பிய பல்வேறு கேள்விக்கு, சுமார் 10 முறை சுவாதி, கோகுல்ராஜ் உடன் கோயிலுக்கு செல்லவில்லை என தொடர்ந்து கூறினார்.விசாரணையின் போது, ஏற்கனவே திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயிலில் இருந்து சிபிசிஐடி போலீசாரால் கைப்பற்றப்பட்ட சிசிடிவி பதிவு காட்சிகள், சுவாதிக்கு நீதிமன்ற அறையில் போட்டு காட்டப்பட்டது. அதில் உள்ள காட்சிகள் குறித்து வழக்கறிஞர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது தனது உருவம் இல்லை என சுவாதி மறுத்தார்.தொடர்ந்து சுவாதியிடம் குறுக்கு விசாரணை செய்ய, யுவராஜ் தரப்பு வழக்கறிஞர்களுக்கு நீதிபதி இளவழகன் நேரம் ஒதுக்கினார். யுவராஜ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமணராஜ், வழக்கறிஞர்கள் பாலசுப்பிரமணி, பாரிவேலன், பூபதிசுந்தரம், கங்காதரன், அரவிந்தன், பரணிதரன் ஆகியோர் தங்களது சார்பில், சுவாதியிடம் குறுக்கு விசாரணை எதுவும் இல்லை என நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து நீதிபதி இளவழகன், வரும் 18ம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார். அன்றைய தினம் இந்த வழக்கில் அரசு தரப்பில் சேர்க்கப்பட்டுள்ள 4 முதல் 14வது சாட்சிகளிடம் விசாரணை நடைபெறும் என அறிவித்தார்.வழக்கு விசாரணையை நடைபெறுவதையொட்டி, நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விசாரணை முடிந்த பிறகு, மாலை 5 மணிக்கு யுவராஜ் உள்பட 15பேரும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • gslvrocket

  ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

 • 15-11-2018

  15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • 129JawaharlalNehru

  நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

 • 2018TiruvannamalaiDeepam

  திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

 • israelfire

  காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்