SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மாவட்ட, சார்நிலை கருவூலத்தில் ஊதியம் பெற புதிய நடைமுறை

9/11/2018 5:26:06 AM

நாமக்கல். செப். 11: நாமக்கல்லில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்களில் பணம் பெறும் நீதித்துறை சார்ந்த அனைத்து நீதிபதிகளுக்கும், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் கீழ் ஊதியம் மற்றும் பிற பலன்களை பெறுவது குறித்த பயிற்சி முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சியை கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்து பேசியதாவது: தமிழகத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் ₹288.90 கோடி செலவில் செயல்படுத்தப் படுகிறது. தற்போது மின்னணு பணிப் பதிவேடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

துறை வாரியாக அனைத்து பணியாளர்களின் சரிபார்ப்பு பணிகள் அந்தந்த துறைகளில் நடைபெற்று வருகின்றன. இந்த பணி முடிந்த பிறகு நவம்பர் முதல் வாரத்தில் இத்திட்டம் செயல் படுத்தப்படும் என்றார்.
நீதித்துறையில் பணியாற்றும் அனைத்து நிலை பணியாளர்களுக்கும், ஊதியம் மற்றும் அனைத்து பலன்களையும் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தின் மூலம் எவ்வாறு பெற்றுத்தருவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் சார் கருவூல அலுவலர் மாதேஸ்வரன், மாவட்ட கருவூல அலுவலக கண்காணிப்பாளர் மோகனா மாதவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-09-2018

    23-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 22-09-2018

    22-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்