SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பேளுக்குறிச்சி அருகே தனியார் நிலத்தில் கம்பி வேலியை உடைத்த 7 பேர் கைது

9/11/2018 5:25:58 AM

சேந்தமங்கலம், செப்.11: ராசிபுரம் போலீஸ் லைன் எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்தவர் தாஜ்முகமது(63).இவருக்கு பேளுக்குறிச்சி அடுத்துள்ள போடிநாய்க்கன்பட்டி ஓனான்கரடு என்ற இடத்தில் விவசாய நிலம் உள்ளது. இவரது நிலத்தின் வழியாக, அருகில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாதை உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக பாதையை  பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தாஜ்முகமது தனது நிலத்தில் இருந்த வழித்தடத்தை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்துள்ளார். ஆனால் அருகில் உள்ள நிலத்தவர்கள், இந்த வழித்தடம் தங்களுக்கு பாத்தியப்பட்டது என தெரிவித்துள்ளனர். இதையடுத்து தாஜ்முகமது, கடந்த 2 நாட்களுக்கு முன் அரசு சர்வேயரை வரவழைத்து, தனது நிலத்தை அளந்து, எல்லை கல் வைத்ததுடன், தோட்டத்துக்கு கம்பி வேலி போட்டார். இதனால் பாதை முற்றிலுமாக மறிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மதியம் அருகில் உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர்களான சின்னுசாமி(66), இளங்கோவன்(58), கார்த்திக்(31), முத்து(61), நல்லப்பன்(38), சுப்பு(55), ரங்கசாமி(47) ஆகியோர் தாஜ்முகமது அமைத்திருந்த கம்பிவேலியை உடைத்தனர். மேலும், அங்கு பயிரிட்டிருந்த பயிர்களை ேசதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தாஜ்முகமது பேளுக்குறிச்சி ேபாலீசில் புகார் செய்தார்.
வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், 7 பேரையும் நேற்று இரவு கைது செய்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-08-2019

    20-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • wphotoday

    உலக புகைப்படத்தினம்: 2019ம் ஆண்டின் பல அறிய புகைப்படங்களின் தொகுப்பு

  • carshowchennai

    சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி: பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்த எம்.ஜி.ஆர் உள்ளிட்ட பிரபலங்களின் கார்கள்

  • hongkongrally

    ஹாங்காங்கில் அமைதி திரும்ப வலியுறுத்தி கொட்டும் மழையில் பேரணி நடத்திய பொதுமக்கள்: சர்வதேச அளவிலும் சீனர்கள் பேரணி

  • 19-08-2019

    19-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்