SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்செங்கோடு அருகே தீ விபத்தில் வீட்டை இழந்த பெண்ணுக்கு நிதிஉதவி

9/11/2018 5:25:50 AM

திருச்செங்கோடு, செப். 11:  திருச்செஙகோடு அருகே பனங்காட்டில் தீவிபத்தில் முற்றிலுமாக எரிந்து போன செல்லம்மாளின்  வீட்டை பார்வையிட்ட எம்எல்ஏ பொன். சரஸ்வதி, அரசின் நிவாரண உதவிகளை  வழங்கினார். திருச்செங்கோடு அருகே உள்ள பனங்காட்டை சேர்ந்தவர் செல்லம்மாள். கூலி தொழிலாளியான இவரது வீடு நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்துக் கொண்டது. அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த திருச்செங்கோடு  தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டினுள் இருந்த இரண்டு டூவீலர், துணிகள், அரிசி  மற்றும் அனைத்து  பொருட்களும் தீயில் எரிந்து நாசமாகின. மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நியைலில் நேற்று அங்கு வந்த திருச்செங்கோடு எம்எல்ஏ பொன் சரஸ்வதி, செல்லம்மாளுக்கு ஆறுதல் கூறியதுடன், அரசின் நிவாரணப் பொருட்களை வழங்கினார். அவருடன் திருச்செங்கோடு தாசில்தார் சுப்ரமணியம், விஏஓ, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்வகுமார் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்