SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாடு தழுவிய பந்த் மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

9/11/2018 5:21:08 AM

கிருஷ்ணகிரி, செப்.11: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நடந்த முழு அடைப்பு போராட்டத்தால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடைகள் அனைத்தும் மூடப்படடன. ஆட்டோக்கள் இயக்கப்படாததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும், நாடு முழுவதும் நேற்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு திமுக, பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்டவை ஆதரவு தெரிவித்தன.

அதன்படி, நேற்று கிருஷ்ணகிரியில் நடந்த முழு அடைப்பு போராட்டத்தினையொட்டி சுமார் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தியேட்டர்களில் காலை மற்றும் மதிய காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. கிருஷ்ணகிரி நகரில் மருந்து கடைகள், ஓட்டல்கள் திறந்திருந்தன. பஸ்கள் வழக்கம் போல ஓடியது. ஆனால், நகரில் ஆட்டோக்கள் காலை 10 மணி முதல் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், புதிய பஸ் நிலையத்தில் இருந்து 5 ரோடு ரவுண்டானாவிற்கு வரும் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். ஓசூரில் முழு அடைப்பு போராட்டம் முழு அளவில் நடைபெற்றது. எம்ஜி ரோடு உள்பட அனைத்து இடங்களிலும் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.

வேப்பனஹள்ளி: மாநில எல்லையில் உள்ள வேப்பனஹள்ளியில் நேற்று அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டன. மளிகை கடைகள், துணி கடைகள், பாத்திர கடைகள், விவசாய விளை பொருட்கள் விற்பனை கடைகள், பலசரக்கு மொத்த விற்பனை மண்டிகள் மற்றும் டீ கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கிராமப்புறங்களில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் பொருட்களை வாங்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.  தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், தளி, அஞ்செட்டி பகுதியில் நடைபெற்ற நாடு தழுவிய பந்திற்கு வணிகர்கள், வியாபாரிகள் கடைகளை அடைத்து முழு ஆதரவு தெரிவித்தனர். தேன்கனிக்கோட்டை பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், ஓசூர் சாலை, எம்.ஜி. ரோடு, நோதாஜி ரோடு ஆகிய பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்படிருந்தன.

காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தமாகா, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் தோழமை கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று திறந்திருந்த ஒரு சில கடைகளை அடைக்க கூறி பந்துக்கு ஆதரவு திரட்டினர். அதேபோல் தளி, அஞ்செட்டி, கெலமங்கலம் பகுதியில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக சென்று பந்துக்கு ஆதரவு திரட்டினர். பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.இதேபோல் ஊத்தங்கரை, மத்தூர், பாரூர், போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், நாகரசம்பட்டி, சூளகிரி உள்பட மாவட்டம் முழுவதும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. போச்சம்பள்ளி: போச்சம்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டன. கார், டெம்போ, ஆட்டோக்கள் இயங்காததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. சில அரசு பஸ்கள் மற்றும் பள்ளி பஸ்சுகள் மட்டும் இயங்கியது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-01-2019

  19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • ChillaiKalanKashmir

  கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

 • bombblastcolombia

  கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

 • chinafiredrone

  மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

 • horse_apain12

  விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்