SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கர்நாடக பேருந்துகள் நிறுத்தம் ஓசூரில் பயணிகள் கடும் அவதி

9/11/2018 5:20:59 AM

ஓசூர்: கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு நாள் ஒன்றுக்கு 120 பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த பஸ்கள் நேற்று இயக்கப்படவில்லை. அதேபோல், தினமும் ஓசூரிலிருந்து பெங்களூருவுக்கு இயக்கப்படும் 180 அரசு மற்றும் தனியார் பஸ்கள், நேற்று காலை முதலே எல்லையில் நிறுத்தப்பட்டன. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் பல்வேறு அலுவல்களுக்காக பெங்களூருவுக்கு சென்று வரும் அவதிக்குள்ளாகினர். ஓசூரிலிருந்து கர்நாடகாவிற்கு செல்லும் மாணவர்கள், தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள், ஐடி பணியாளர்கள் பாதிப்படைந்தனர். இதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவிலிருந்து ஓசூருக்கு வரக்கூடிய தொழிலாளர்களம் பாதிக்கப்பட்டனர். ஓசூர் பஸ் ஸ்டாண்டில் கர்நாடக பஸ்கள் நிற்கும் இடம் காலியாக காணப்பட்டது. ஏராளமான பயணிகள் மாலை வரை பஸ்சுக்காக காத்திருந்தனர். மாலை 6 மணிக்கு மேல் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

  • bandh_inwest123

    மேற்கு வங்காளத்தில் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் ரயில் மறியல் !

  • israel_newfasttrain

    இஸ்ரேலில் அதிவேக இரயில் திறப்பு - மக்கள் உற்சாகம் !

  • virataward_1234

    விராட் கோலி, மீராபாய் சானுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - ஜனாதிபதி வழங்கி கௌரவித்தார் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்