SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாவட்டம் முழுவதும் பரவலாக மழை நெடுங்கல்லில் 86.20 மி.மீ., பதிவு

9/11/2018 5:20:50 AM

கிருஷ்ணகிரி, செப்.11: கிருஷ்ணகிரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. குறிப்பாக நேற்று முன்தினம் காலை முதல் அதிகளவில் வெயில் இருந்ததால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், நிலக்கடலை பயிர்கள் கருகும் நிலையில் இருந்தது. ஏப்ரல், மே மாதங்களை விட அதிக அளவில் வெயில் இருந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் வேதனையடைந்தனர்.  இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவில் வடமாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

 இரவு சுமார் 7.30 மணிக்கு துவங்கி சுமார் 30 நிமிடம் பெய்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதையடுத்து பூமி குளிர்ச்சியடைந்து, வெப்ப காற்று தணிந்து, குளிர்காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நேற்று காலை 7 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம்(மில்லி மீட்டரில்) வருமாறு: அதிகபட்சமாக நெடுங்கல்லில் 86.20 மழை பதிவாகியிருந்தது. பாரூர் 37.80,  கிருஷ்ணகிரி 10, போச்சம்பள்ளி 10, ஊத்தங்கரை 1 என மொத்தம் 145 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-11-2018

    21-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்