SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓராண்டுக்கு பின்பு கனமழை போச்சம்பள்ளி மக்கள் மகிழ்ச்சி

9/11/2018 5:20:43 AM

போச்சம்பள்ளி: கடந்தாண்டில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த போதிலும் போச்சம்பள்ளி பகுதியில் கடும் வறட்சியே நிலவியது. பருவமழையை எதிர்பார்த்து சுமார் 10 ஆயிரம் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், போதிய நீராதாரம் இன்றி சருகானது. மேலும் மா, தென்னை மரங்களும் காயும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தண்ணீரை விலை கொடுத்து வாங்கி வந்து தோட்டத்திற்கு பாய்ச்சும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். மழை வரும் என எதிர்பார்த்து வானத்தை பார்த்தவாறு தினசரி விவசாயிகள் ஏமாந்து வந்தனர்.  இந்நிலையில், வருண பகவான் கருணையால் போச்சம்பள்ளி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்தது. கடந்த ஓராண்டுக்கு பின்பு பரவலாக பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வெப்பம் தணிந்து குளிர்ந்து காற்று வீசியது. இதனால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து விவசாய பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்