SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோபசந்திரம் கிராமத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

9/11/2018 5:20:36 AM

சூளகிரி, செப்.11: கோபசந்திரம் கிராமத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்ததால் விவசாயிகள் பீதிக்குள்ளாகியுள்ளனர். சூளகிரி தாலுகா கோபசந்திரம் அடுத்த சானமாவு பகுதியில் 6 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் கோபசந்திரம் கிராமத்துக்குள் புகுந்தன. அங்கு வெங்கடேசப்பா, முனிராஜ், கோபால், லட்சுமணன், சீனிவாஸ், உள்ளிட்ட விவசாயிகளின் தோட்டத்திற்குள் புகுந்து ரோஜா, நெல், காலிபிளவர், தக்காளி, மிளகாய் உள்ளிட்ட செடிகளை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின.

இதுகுறித்த தகவலின்பேரில் நேற்று அதிகாலை அப்பகுதிக்கு வனத்துறையினர் விரைந்து சென்றனர். பின்னர், அனைத்து யானைகளையும் போடூர் பள்ளத்திற்கு விரட்டியடித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக யானைகள் முகாமிட்டு பல்வேறு பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதற்கு உரிய நிவாரணம் வழங்க கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்கி யானைகள் மீண்டும் விவசாய நிலங்களை சேதப்படுத்தாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்