SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

9/11/2018 5:20:28 AM

கிருஷ்ணகிரி, செப்.11:  கிருஷ்ணகிரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இவர்களில் 14 பேர் மாநில போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடந்தது. தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளரும், உடற்கல்வி ஆசிரியருமான பவுன்ராஜ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் அம்முதாஸ், குரு ராகவேந்திரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் தொடங்கி வைத்தார். ஆண்கள், பெண்கள் என இருபிரிவுகளிலும் 121 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கிடையே வயது மற்றும் எடை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, மாநில போட்டிக்கு 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி, ஆண்கள் பிரிவில் திருநாவுக்கரசு, பரத்வாஜ், ஹேமநாதன், தமிழ்சோழன், கனிஷ்சரண், ஜீவானந்தன், எழில்அக்சயா, குருசரண், சூர்யா, சரண்ராஜ் ஆகியோரும், பெண்கள் பிரிவில் மதுமலர், தமிழ்மதி, ஹேமலதா, ஓவியா ஆகியோரும் என மொத்தம் 14 பேர் மாநில போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். மாநில போட்டி வரும் 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நடைபெறுகிறது. இதில் 14 பேரும் பங்கேற்க உள்ளனர். போட்டியின் நடுவர்களாக சூர்யா, சரவண்ராஜ், சதாசிவம், ஜோசப், சுரேஷ்பாபு, ராகவன் ஆகியோர் செயல்பட்டனர். ஏற்பாடுகளை சந்தோஷ், முருகேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர். 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

  • horse_apain12

    விலங்குகளை சுத்தப்படுத்தும் திருவிழா : நெருப்புக்குள் குதிரைகளை செலுத்தும் ஸ்பெயின் மக்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்