SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடு ஆலோசனை கூட்டம்

9/11/2018 5:20:04 AM

தேன்கனிக்கோட்டை, செப்.11: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் விதிமுறைகள் குறித்து டிஎஸ்பி விளக்கம் அளித்தார்.
நாடு முழுவதும் வரும் 14ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ஆங்காங்கே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட தேன்கனிக்கோட்டை, தளி, மதகொண்டப்பள்ளி, கெலமங்கலம், அஞ்செட்டி உள்ளிட்ட பகுதியில் இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங்தல் உள்பட இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு சிலைகள் அமைப்பது தொடர்பாக தேன்கனிக்கோட்டையில் காவல்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டிஎஸ்பி சங்கர் பங்கேற்று, விநாயகர் சிலை அமைப்பது குறித்த விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கி கூறினார். இந்த கூட்டத்தில் காவல் ஆய்வாளர்கள் தேன்கனிக்கோட்டை சுப்பிரமணி, சாவித்திரி, ராயக்கோட்டை சிவலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Deebam7thDay

    திருவண்ணாமலை தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளில் கோலாகலம்: பக்தர்கள் வெள்ளத்தில் மகா ரதம் பவனி

  • 21-11-2018

    21-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • bathnatural

    சர்வதேச இயற்கை மருத்துவத் தினத்தை முன்னிட்டு மணல் குளியல் விழிப்புணர்வு

  • puegovolconoerupt

    கவுதமாலாவில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியது : 4,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம்

  • delhiproblem

    டெல்லியில் நிலவும் பனிப்புகை மூட்டத்தால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்