SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கூடுதலாக 50 பவுன் நகை கேட்டு தாலி கட்ட மறுத்த மணமகன் கைது

9/11/2018 5:15:10 AM

திருச்சி, செப்.11: திருவெறும்பூர் அருகே திருமணத்திற்கு 2 நாட்களே உள்ள நிலையில் கூடுதல் வரதட்சணை தராததால் திருமணம் செய்ய மறுத்த தனியார் கம்பெனி அதிகாரியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மாப்பிள்ளையின் தாய், தந்தை, தங்கை ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் நாளை நடக்கவிருந்த திருமணம் நின்று போனது.தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள கடையகுடியை சேர்ந்தவர் ராஜசேகர். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர் தற்போது திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியில் உள்ளார். இவருக்கும், துவாக்குடி ராவுத்தன்மேட்டில் வசிக்கும் திருச்சி தனியார் கெமிக்கல் கம்பெனியில் கொள்முதல் அதிகாரியாக உள்ள மகேந்திரன் என்பவருக்கும் கடந்த ஜூன் 17ம்தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மகேந்திரனின் தந்தை சரவணன் என்ஐடியில் ஊழியராக உள்ளார். நிச்சயதார்த்தத்தின்போது மாப்பிள்ளைக்கு வரதட்சணையாக 50 பவுன் நகை மற்றும் காருக்கு பதில் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டனர். அதன்படி பெண் வீட்டார் வரதட்சணை தருவதாக சம்மதித்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி திருச்சியில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் ராதாவிற்கு முகூர்த்த புடவை எடுக்க சென்றுள்ளனர். அங்கு மகேந்திரன் தரப்பினர் 20 ஆயிரத்திற்குள் திருமணப் புடவை எடுக்கும்படி கூறியுள்ளனர். ஆனால் ராதா வீட்டு தரப்பினர் ரூ.30 ஆயிரத்திற்கு புடவை எடுக்கவேண்டுமென்று கூறியுள்ளனர். இதனால் இரு வீட்டாருக்கும்   இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் மாப்பிள்ளை வீட்டார் கூறியதைவிட ரூ.2 ஆயிரம் கூடுதலாக புடவை எடுத்துள்ளனர். இதற்கிடையில் நாளை (செப்டம்பர் 12ம் தேதி) காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண்டபத்தில் திருமணம் நடப்பதாக இருந்ததால் ராதா தரப்பினர் தனது உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ்களை கொடுத்து முடித்து விட்டனர். இந்நிலையில் இரு வீட்டாருக்கும் இருந்த மனக்கசப்பு பெரிதானது. மாப்பிள்ளை வீட்டார் 50 பவுனுக்கு பதில் 100 பவுன் வரதட்சணையாக போடும்படி கேட்டுள்ளனர். இதற்கு பெண் வீட்டார் நிச்சயதார்த்தம் பேசியபோது 50 பவுன் நகை, 5 லட்சம் தான் வரதட்சணை கேட்டீர்கள். ஆனால் தற்போது 100 பவுன் கேட்கீறீர்களே என்று கேட்டுள்ளனர். அதற்கு மகேந்திரன் தரப்பினர் திருமணத்திற்கு முன்பே 100 பவுன் போட்டால் திருமணத்தை வைத்து கொள்ளலாம். இல்லையென்றால் திருமணத்தை நிறுத்திவிடுங்கள் என்று கூறி உள்ளனர். அதற்கு பெண்ணின் குடும்பத்தினர் முதலில் பேசியபடி திருமணம் நடக்கட்டும். பின்னர் கூடுதலாக வரதட்சணை பற்றி பேசி கொள்ளலாம் என்று கூறியுள்ளனர்.
ஆனால் மகேந்திரன் குடும்பத்தினர் திருமணத்தை நிறுத்திவிடுங்கள் என்று கூறி பிடிவாதமாக இருந்ததால் கடந்த 7ம் தேதி ராஜசேகர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அமுதராணி இருதரப்பினரையும் அழைத்து சமரசம் பேசினார்
ஆனால் மகேந்திரன் தரப்பினர் ராதாவை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் வரதட்சனை, பெண் வன்கொடுமை மற்றும் மிரட்டியது என 3 பிரிவின் கீழ் மகேந்திரன், அவரது தாய் பாப்பாத்தி, தந்தை சரவணன், தங்கை மகாலட்சுமி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதீவு செய்து மகேந்திரனை கைது செய்தார்.
மேலும் தலைமறைவான பாப்பாத்தி, சரவணன், மகாலட்சுமி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர். இதனால் நாளை நடக்கவிருந்த திருணம் நின்று போனது. நாளை நடக்க இருந்த திருமணம் நின்றது

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • japan_animsehan11

  ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 13 பேர் பலி

 • wax_giant_pics

  மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

 • church_cathdral11

  நெருப்புக்கு இரையான 850 ஆண்டுகள் பழமையான நோட்ரேடேம் தேவாலயம் : அதிக அழகுடன் மீட்டெடுக்க போராடும் பணியாளர்கள்

 • apolo_50vinkalam1

  நிலவில் கால் பதித்த 50 ஆண்டு தின கொண்டாட்டம் : விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் 363 அடி நீள அப்போலோ 11 விண்கலம் மாதிரி!!

 • 18-07-2019

  18-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்