SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பி.அக்ரஹாரம் அருகே அனுமதியின்றி நடக்கும் மதுவிற்பனையை தடுக்க கலெக்டரிடம் வலியுறுத்தல்

9/11/2018 5:14:42 AM

தர்மபுரி, செப்.11: தர்மபுரி மாவட்டம் பி.அக்ரஹாரம் அருகே ராஜாகொல்லஅள்ளியில் அனுமதியின்றி நடக்கும் மதுவிற்பனையை தடுக்கக்கோரி, முன்னாள் ஊராட்சி தலைவர், பொதுமக்களுடன் சேர்ந்து வந்து கலெக்டரிம் மனு அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது; பென்னாகரம் தாலுகா ராஜாகொல்லஅள்ளியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் உள்ள பட்டா நிலங்களில் சிலர் டாஸ்மாக் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து பதுக்கி வைத்து அனுமதியின்றி விற்பனை செய்கின்றனர்.  இதை தட்டிக்கேட்பவர்களை விற்பனை செய்வோர் மிரட்டுகின்றனர். இது தொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் எங்களுடைய பகுதியில் தொடர்ந்து அனுமதியின்றி மதுவிற்பனை நடந்து வருகிறது. புகார் அளித்தால், வழக்கு போடுவோம் என போலீசாரே மிரட்டி எழுதி வாங்குகின்றனர். அனுமதியின்றி மதுவிற்பனை செய்வதை தடுக்கவும், பாப்பாரப்பட்டி போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர், எஸ்பிக்கு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்