SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கணவர், குழந்தையுடன் சேர்த்து வைக்கக்கோரி எஸ்பியிடம் மனு

9/11/2018 5:14:32 AM

தர்மபுரி, செப்.11: கணவர், குழந்தையுடன் சேர்த்து வைக்கக்கோரி, பெண் ஒருவர் எஸ்பியிடம் புகார் மனு அளித்தார்.  தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி. இவரது மனைவி பிரியா. நேற்று தர்மபுரி எஸ்பி பண்டி கங்காதரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பென்னாகரம் அருகே பி.அக்ரஹாரத்தை சேர்ந்த ராஜிவ்காந்திக்கும், எனக்கும் 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணத்தின் போது 15 பவுன் நகை, 55 ஆயிரம் ரொக்கம், சீர்வரிசை ஆகியவற்றை எனது பெற்றோர் கொடுத்தனர்.
 
 நாங்கள் நல்ல முறையில் வாழ்க்கை நடத்தி வந்தோம். என் கணவர் சந்தேகப்பட்டு போன் பேசுவதற்கும், பெற்றோர் வீட்டிற்கு அனுப்பவும் அனுமதிக்கவில்லை. சில மாதங்களுக்கு முன் பெற்றோரிடம் இருந்து பணம் வாங்கி வருமாறு என்னை அனுப்பி விட்டு, குழந்தையை தன் வசம் வைத்து கொண்டார். தற்போது நான் எனது பெற்றோர் வீட்டில் வசிக்கிறேன். மாவட்ட எஸ்பி உரிய விசாரணை நடத்தி குழந்தை, கணவருடன் சேர்த்து வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • venkhaiahnaidu

    செர்பியா, ரோமானியா நாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

  • keralanunprotest

    பிஷப் பிராங்கோவை கைது செய்யாததை கண்டித்து கேரளாவில் கன்னியாஸ்திரிகள் போராட்டம்

  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

  • thirupathiseventh

    திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்