SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிக எரிபொருளுக்கான காரணிகள் இருப்பதால்நன்னீர் பாசிகள் வளர்க்கும் வழிமுறையை கண்டறிய வேண்டும்

9/11/2018 5:14:24 AM

திருச்சி, செப்.11: அதிக எரிபொருளுக்கான காரணிகள் நன்னீர் பாசிகளில் இருப்பதால் ஆராய்ச்சியாளர்கள் குறைந்த முதலீட்டில் நன்னீர்பாசிகள் வளர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும் என மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பவியல் இணை இயக்குனர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மத்திய அரசின் நிதியுதவியுடன் நன்னீர் வாழ் நுண்பாசிகள் மற்றும் சயனோ பாக்டீரியாக்களின் தேசியக் களஞ்சியம் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது.சிறப்பு விருந்தினரான மத்திய அரசின் உயிர் தொழில்நுட்பவியல் இணை இயக்குனர் சங்கீதா கஸ்தூரி மையத்தை திறந்து வைத்து பேசுகையில், ‘நன்னீர் மற்றும் கடல்வாழ் பாசிகளிலிருந்து பெறப்படும் உயிர் எரிபொருளானது தற்போது உள்ள எரிபொருளில் இருந்து சிறந்த மாற்று எரிபொருளாக விளங்கும். ஆகையால் தொழில் நிபுணர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நன்னீர் பாசிகள் மிகக் குறைந்த முதலீட்டில் வளர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும்.
பாசிகளில் அதிக எரிபொருளுக்கான மிக முக்கியக் காரணிகள் இருப்பதால் இவை ஒரு சிறந்த மாற்று எரிபொருளாக அறியப்படுகிறது’ என்றார்.
பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை தலைவர் தாஜூதீன் வரவேற்று பேசுகையில், நன்னீர் வாழ் நுண்பாசிகள் மற்றும் சயனோ பாக்டீரியாக்களுக்கான தேசியக் களஞ்சியம், இந்திய அரசின் உயிர் தொழில் நுட்பவியல்துறை நிதியுதவியுடன் ஆராய்ச்சிகளுக்கு தேவையான அனைத்து உள்கட்டமைப்பு வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. இம்மையம் இத்துறை சார்ந்த அறிவியல் அறிஞர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் மிகுந்த பயனுடையதாக இருக்கும்.
இத்துறையின் முழுமையான ஆராய்ச்சிக்கு இது வழி வகுக்கும். அமெரிக்காவில் உள்ள அமெரிக்கன் மாதிரி வளரி சேகரிப்பு மையம், பிரான்ஸ் நாட்டின் பாஸ்டர் வளரி சேகரிப்பு மையம் ஆகியவற்றைப் போன்று நம் நாட்டில் இக்களஞ்சியம் சிறப்பாக அமைந்துள்ளது என்றார்.
சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின்  முன்னாள் துணைவேந்தர் ஆனந்த் மற்றும் சென்னை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய  இயக்குனர் சிவசுப்ரமணியன் வாழ்த்தி பேசினர். நுண்ணுயிரியல் துறை உதவிப்  பேராசிரியர் முரளிதரன் நன்றி கூறினார். இணையதளம் திறப்பு
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கர் நன்னீர் வாழ் நுண்பாசிகள் மற்றும் சயனோ பாக்டீரியாக்களின் தேசியக் களஞ்சியத்திற்கான பிரத்யேக இணையதளத்தை திறந்து வைத்து பேசுகையில், ‘இவற்றில் முன்னூற்றுக்கும் அதிகமான நுண்பாசிகள் மற்றும் சயனோ பாக்டீரியாவின் அனைத்து விவரங்களும் ஆராய்ச்சி மாணவர்கள் பயனடையும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளன. நம் நாட்டில் மாற்று எரிபொருளாக பயோடீசல் உற்பத்தி முக்கியத்துவம் பெற்று வருகிறது. மாணவர்கள் இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 20-02-2019

  20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • mallakamb_mumbai

  மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

 • varanasi_modi123

  டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

 • china_lamfesti1

  சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

 • 2mili_nall

  காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்