SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெட்ரோல், டீசல் விலை : மத்திய அரசைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் மறியல்

9/11/2018 5:05:44 AM

விருதுநகரி, செப். 11: விருதுநகர் மாவட்டத்தில் பெட்ரோல் விலை உயர்வை தடுக்காத மத்திய அரசை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 56 பெண்கள் உட்பட 514 பேரை போலீசார் கைது செய்தனர்.பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை தடுக்காத மத்திய அரசை கண்டித்து, காங்கிரஸ் தலைமையில் கூட்டணி கட்சிகள் நேற்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை (பாரத் பந்த்) நடத்தியது.  இதனையொட்டி, விருதுநகர் மாவட்டத்தில் ஆட்டோ, லோடு வேன்கள் நேற்று ஓடவில்லை. அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடின. மாவட்டத்தில் பல இடங்களில் மார்க்சிஸ்ட், இ.கம்யூ கட்சியினர் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருதுநகர் பழைய பஸ்நிலையம் எதிரில் மார்க்சிஸ்ட் கட்சி வேல்முருகன், இ.கம்யூ நகர செயலாளர் காதர்மைதீன் ஆகியோர் தலைமையில், மார்க்சிஸ்ட் மாநில குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு வேலுச்சாமி ஆகியோர் முன்னிலையில், மத்திய அரசைக் கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 7 பெண்கள் உட்பட 42 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல, சிவகாசி பஸ்நிலையம் முன்பாக இ.கம்யூ., நகரச் செயலாளர் ஜீவா தலைமையில் நடந்த மறியலில், ஒரு பெண் உட்பட 28 பேர், திருத்தங்கல் அண்ணா சிலை முன்பாக இ.கம்யூ நகரச் செயலாளர் சுரேஷ் தலைமையில நடந்த மறியலில் 6 பெண்கள் உட்பட 29 பேர், அருப்புக்கோட்டை இந்திய ஓவர்சிஸ் வங்கி முன்பாக மார்க்சிஸ்ட் நகர செயலாளர் காத்தமுத்து தலைமையில் நடந்த மறியலில் 19 பேர், பாலையம்பட்டி முத்தரையர் சிலை முன்பாக தாமஸ் தலைமையில் நடந்த மறியலில், 5 பெண்கள் உட்பட 24 பேர், காரியாபட்டி பஸ் நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் அம்மாசி தலைமையில் நடந்த மறியலில் 3 பெண்கள் உட்பட 39 பேர் என போலீசார் கைது செய்தனர்.

ராஜபாளையம் காந்தி சிலை முன்பாக, இ.கம்யூ நகரச் செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடந்த மறியலில் 24 பேரையும், சத்திரப்பட்டியில் தபால் அலுவலகம்  முன்பாக இ.கம்யூ., நகர செயலாளர் மாரியப்பன் தலைமையில் நடந்த மறியலில்  9 பெண்கள் உட்பட 58 பேரையும், சேத்தூர் பஸ்நிறுத்தம் முன்பாக மார்க்சிஸ்ட் நகர செயலாளர் வீரசாமி தலைமையில் நடந்த தலைமையில் 37 பேரையும் போலீசார் கைது செய்தனர். சாத்தூரில் மதுரை பஸ்நிறுத்தம் முன்பாக நகரச் செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடந்த மறியலில், 9 பெண்கள் உட்பட 28 பேரையும், இருக்கன்குடிமுத்தார்பட்டி பஸ் நிறுத்தம் எதிரில் இ.கம்யூ., மாவட்ட கமிட்டி சுந்தரபாண்டியன் தலைமையில் நடந்த மறியலில் 14 பேரையும் போலீசார் கைது செய்தனர். திருவில்லிபுத்தூர் பஸ்நிலையம் முன்பாக மார்க்சிஸ்ட் நகர செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் மறியலில் 15 பெண்கள் உட்பட 57 பேரையும், வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜாரில் முன்னாள் எம்எல்ஏ ராமசாமி தலைமையில் நடந்த மறியலில் ஒரு பெண் உட்பட 64 பேரையும், கிருஷ்ணன்கோவிலில் மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலர் சசிகுமார் தலைமையில் நடந்த மறியலில் 21 பேரையும், திருச்சுழி பஸ் நிறுத்தம் அருகில் மார்க்சிஸ்ட் ஒன்றியச் செயலர் அன்பு தலைமையில் நடந்த மறியலில் 30 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மாவட்டம் முழுவதும் 15 இடங்களில் நடந்த மறியலில் 56 பெண்கள் உட்பட 514 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.
ரயிலை மறிக்க முயன்ற 11 பேர் கைதுபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து, நேற்று நடைபெற்ற பாரத் பந்த்தில், விருதுநகரில் காங்கிரஸ் நகர தலைவர் வெயில் முத்து தலைமையில் இளைஞர் காங்.தலைவர் மீனாட்சி சுந்தரம், பால்பாண்டி, வைரவசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர செயலர் செல்வம், ஒன்றியச் செயலர் லிங்கசாமி உட்பட பலர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்றனர். இது தொடர்பாக, 11 பேரை விருதுநகர் மேற்கு போலீசார் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-07-2019

    20-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • hotairballoonchina

    சீனாவில் நடைபெற்ற ராட்சத பலூன் போட்டி: சுமார் 100 பலூன்கள் ஒரே சமயத்தில் வானுயர பறந்த காட்சிகள்

  • CornwallJellyfishEncounter

    இங்கிலாந்தில் ஆளுயரத்திற்கு வளர்ந்துள்ள பிரம்மாண்டமான ஜெல்லி மீன்..: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

  • newzealandexplosion

    எரிவாயு கசிவு காரணமாக நியூஸிலாந்தில் வீடு ஒன்று வெடித்து சிதறி தரைமட்டம்: 6 பேருக்கு படுகாயம்!

  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்