SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சுழி பகுதியில் சேதமடைந்த நிழற்குடைகளை சீரமைக்க கோரிக்கை

9/11/2018 5:05:34 AM

திருச்சுழி, செப். 11: திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதியில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பள்ளி மற்றும் கல்லூரிக்காக வெளியூர் சென்று வருகின்றனர். இதேபோல கூலித்தொழிலாளர்கள் வேலைக்காக அருப்புக்கோட்டை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர். மேலும், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களும் தினசரி வெளியூர் சென்று வருகின்றனர். பெரும்பாலும், கிராமப் புறங்களைச் சேர்ந்தவர்கள் தினசரி பஸ் போக்குவரத்தை நம்பியுள்ளனர்.இந்நிலையில், கிராமங்கள் தோறும் பஸ் பயணிகளுக்கு நிழற்குடைகள் கட்டப்பட்டுள்ளன. இவைகள் போதிய பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. பல இடங்களில் நிழற்குடைகளே இல்லை. கிராமப்புற பயணிகள் நிழற்குடைகள் 70 சதவீதம் நிழற்குடைகள் சேதமடைந்துள்ளன. இதனால், பயணிகள் வெயில், மழை காலங்களில் அவதிப்படுகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, கிராமப்புறங்களில் உள்ள பயணிகள் நிழற்குடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து கணேஷ் என்பவர் கூறுகையில், ‘கிராமப்புறங்களில் உள்ள நிழற்குடைகள் சேதமடைந்துள்ளன. மேற்கூரைகளில் பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், பயணிகள் நிழற்குடையில் நிற்க அச்சப்படுகின்றனர். மழை, வெயில் காலங்களில் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், சேதமடைந்த நிழற்குடைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறினார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்