SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

செங்கோட்டை அருந்ததியர் காலனியில் 2 ஆண்டாக குடிநீர் விநியோகம் இல்லை

9/11/2018 5:05:25 AM

விருதுநகர், செப். 11: செங்கோட்டை அருந்ததியர் காலனியில், 2 வருடங்களாக தண்ணீர் வராத நிலையில், மனு அளிக்க காலிக்குடங்களுடன் பெண்கள் வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.விருதுநகர் அருகே உள்ள செங்கோட்டை அருந்ததியர் காலனி பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: செங்கோட்டை அருந்ததியர் காலனியில் 200க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இங்குள்ள தெருக்குழாய்களில் கடந்த 2 ஆண்டுகளாக குடிநீர் வரவில்லை. காலனிப்பகுதியில் உள்ள இரண்டு மேல்நிலைத்தொட்டிககளில் ஏற்றப்படும் தண்ணீர் மற்ற குடியிருப்பு பகுதிகளுக்கு தினசரி திறந்து விடப்படுகிறது. மேலும், மெயின் குழாய் இணைப்பில் மற்ற தெருக்களின் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளதால் தினசரி தண்ணீர் வருகிறது. அருந்ததியர் காலனிக்கு மட்டும் 2 ஆண்டுகளாக தண்ணீர் வருவதில்லை. இது குறித்து கேட்கவும் அச்சமாக உள்ளது. மேலும் தனிநபர் கழிப்பறைகள் அனைத்து குடியிருப்புகளுக்கும் வழங்கப்படும் நிலையில், அருந்ததியர் காலனி குடியிருப்புகளுக்கு வழங்கப்படவில்லை. வாறுகால், தெருவிளக்கு, சுகாதார வசதியின்றி காலனி மக்கள் சிரமப்படுகிறோம். எனவே, கலெக்டர் நேரில் ஆய்வு செய்து அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் விநியோகத்திற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க கோரிக்கை:
திருவில்லிபுத்தூர் இனாம்செட்டிகுளம் அருந்ததியர் காலனி மக்கள் ஆதித்தமிழர் கட்சி ஒன்றியச் செயலர் பொன்னுச்சாமி தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:   திருவில்லிபுத்தூர் ஒன்றியம், இனாம்செட்டி குளம் அருந்ததியர் காலனியில் குடியிருக்கும் பொதுமக்கள் அடிப்படை வசதியின்றி தவிக்கிறோம். இதனால், வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். எங்கள் காலனி மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேலும் இடையன்குளம், மேட்டுமுள்ளிக்குளம், மம்சாபுரம், இடையபொட்டல்பட்டி, ரைட்டன்பட்டி, நாச்சியார்பட்டி, குப்பான்மடம், பூவானி, கன்னார்பட்டி, வேப்பங்குளம், பேயம்பட்டி, தொம்பக்குளம் கிராமங்களில் அருந்திய மக்கள் வசிக்கும் பகுதிகள் அடிப்படை வசதிகளின்றி இருப்பதால், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில்
தெரிவித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-09-2018

    25-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்