SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரியாபட்டி 11வது வார்டில் காட்சிப்பொருளான சுகாதார வளாகம்

9/11/2018 5:05:06 AM

காரியாபட்டி, செப். 11: காரியாபட்டி 11வது வார்டில் பராமரிப்பின்றி மகளிர் சுகாதார வளாகம் பூட்டிக் கிடக்கிறது. இப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராமல் புறக்கணிப்பதாக பேரூராட்சி நிர்வாகம் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 2,9 மற்றும் 14வது வார்டுகளில் பேரூராட்சி பொதுநிதியிலிருந்து 6 லட்சம் ரூபாய் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மக்கள் அதிகமாக வாழும் 11வது வார்டில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால், இப்பகுதி பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்குகின்றனர். 11வது வார்டில் உள்ள பள்ளத்துப்பட்டியில் பெண்களுக்காக சுமார் ரூ.12 லட்சம் மதிப்பில் கழிவறை கட்டப்பட்டது. ஆனால், தரமற்ற கட்டுமானப் பணியால் ஓராண்டில் கழிவறையில் உள்ள கதவுகள் கோப்பைகள் சேதமடைந்தன. கழிவறையை முறையாக பராமரிக்காததால் தற்போது பெண்கள் செல்ல முடியாத அளவிற்கு புதர்மண்டிக் கிடக்கிறது. இதனால், பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க, திறந்தவெளிக்கு செல்கின்றனர்.
இதேபோல, என்.ஜி.ஒ நகர் வழியாகச் செல்லும் வாறுகால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால், குப்பைகளுடன் கழிவுநீர் குளம்போல தேங்கிக் கிடக்கிறது. அப்பகுதி வழியாகச் செல்பவர்கள் மூக்கைப் பிடித்துக்கொண்டு செல்கின்றனர். இதில், கொசுக்கள் உருவாகி பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை உருவாக்குகிறது. என்ஜிஓ நகர் பொதுமக்களுக்காக கள்ளிக்குடி ரோடு, பள்ளத்துப்பட்டி செல்லும் வழியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி காட்சிப் பொருளாக உள்ளது. 11வது வார்டில் கழிவுநீர் வாறுகாலை தூர்வாரவும், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவும், பள்ளத்துப்பட்டியில் மகளிர் சுகாதார வளாகத்தை பராமரித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘பள்ளத்துப்பட்டியில் மகளிர் சுகாதார வளாகம் கட்டி ஏழு ஆண்டுகளாகிறது. தரமற்ற கட்டுமானத்தால் ஓராண்டில் கதவு, கோப்பைகள் சேதமடைந்துள்ளன. 11வது வார்டில் மக்கள் நலத் திட்டங்களை பேரூராட்சி நிர்வாகம் செயல்படுத்துவதில்லை. சாலை, குடிநீர், தெருவிளக்கு வசதியில்லை. எனவே, 11வது வார்டு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gslvrocket

    ஜிசாட் 29 செயற்கைகோளை சுமந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி மார்க்3-டி2 ராக்கெட்

  • 15-11-2018

    15-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்