SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மீனம்பட்டி கிராமத்தில் குண்டும் குழியுமான சாலை

9/11/2018 5:04:00 AM

சிவகாசி, செப். 11: சிவகாசி அருகே, குண்டும் குழியுமாக காணப்படும் கிராமச் சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.சிவகாசி ஊராட்சி ஒன்றியம், அனுப்பன்குளம் ஊராட்சியில் மீனம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மீனம்பட்டி தெற்கூர், வடக்கூர், நடுவூர் என பல்வேறு பகுதிகள் உள்ளன. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இதில் வடக்கூர் பகுதியில் மட்டும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் பெரும்பாலான சாலைகள் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன. டூவீலர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் சாலைகள் பழுதடைந்துள்ளன. சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில், பல்வேறு கிராமங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில் மீனம்பட்டியில் சேதமடைந்து பல ஆண்டுகள் ஆகியும் சாலைகள் புதுப்பிக்கப்படாத நிலையில் காணப்படுகின்றது. சாலையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனம்பட்டி கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்