SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மத்திய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிராக மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம்

9/11/2018 5:00:31 AM

தேனி, செப். 11: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், போடி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை ஓரளவு பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 15 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 601 பேர் ைகது செய்யப்பட்டனர்.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான அரசு நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. தற்போது பெட்ரோல் விலையானது லிட்டருக்கு ரூ.87 வரை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்து நாடு தழுவிய கடையடைப்பு, வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்தது. இதற்கு தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இதனையடுத்து நேற்று நாடு முழுவதும் போராட்டம் நடந்தது.தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், போடி, சின்னமனூர் ஆகிய ஊர்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம், தேவாரம் ஆகிய ஊர்களில் சிலர் கடைகளை அடைத்தனர். மேலும் மாவட்டம் முழுவதும் ஆட்டோக்கள் குறைவாகவே இயக்கப்பட்டன.தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு நாள்தோறும் கேரள மாநிலத்திற்கு தோட்ட வேலைக்கு செல்வோர் நேற்று செல்லவில்லை. ஜீப்புகளும் இயக்கப்படவில்லை. மேலும், கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு எந்த வாகனமும் இயக்கப்படவில்லை. இதேபோல போடி வழியாக மூணாறு, நெடுங்கண்டம் உள்ளிட்ட கேரளமாநிலத்திற்கும் எந்த பஸ்சும் இயக்கப்படவில்லை.தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, கம்பம், தேவாரம், லோயர்கேம்ப் ஆகிய பகுதிகளில் அரசு போக்குவரத்துக் கிளை அலுவலகங்கள் உள்ளன. இக்கிளைகளில் உள்ள பஸ்களை திமுகவின் தொமுச, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொழிற்சங்கங்கள், காங்கிரஸ் கட்சியின் ஐஎன்டியுசி, விசிகவின் தொழிற் சங்கங்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அதிமுகவைச் சேர்ந்த தொழிற்சங்கத்தினர் கூடுதலாக பஸ்களை இயக்கினர்.

15 இடங்களில் மறியல்பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தேனி மாவட்டத்தில் 15 இடங்களில் நடந்த மறியலில் 601 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி நேரு சிலை அருகே நடந்த மறியல் போராட்டத்திற்கு காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். இதில் திமுக மாவட்ட பொறுப்பாளர் கம்பம்.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன், இ.கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத், விசிக பாராளுமன்றத் தொகுதி செயலாளர் தமிழ்வாணன், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாவட்ட தலைவர் சக்கரவர்த்தி, திமுக ஒன்றிய பொறுப்பாளர் சக்கரவர்த்தி, நகர பொறுப்பாளர் முருகேசன், முஸ்லீம் லீக் கட்சி, சமத்துவ மக்கள் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, எஸ்டிபிஐ, மனிதநேயமக்கள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட 62 பேரை போலீசார் கைது செய்தனர்.
உத்தமபாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த மறியலில் 25 பேரும், சின்னமனூரில் மார்க்கையன்கோட்டை சந்திப்பில் நடந்த மறியலில் 20 பேரும், போடியில் தேவர் சிலை அருகில் நடந்த மறியலில் 112பேரும், சிலமலையில் நடந்த போராட்டத்தில் 13 பேரும், ஆண்டிபட்டி இந்தியன் வங்கி எதிரே நடந்த போராட்டத்தில் 58 பேரும், கடமலைக்குண்டு போஸ்ட் ஆபீஸ் அருகே நடந்த போராட்டத்தில் 55 பேரும், கம்பத்தில் நடந்த போராட்டத்தில் 240 பேரும், பெரியகுளத்தில் நடந்த போராட்டத்தில் 133 பேரும், கோம்பையில் நடந்த போராட்டத்தில் 58 பேரும், கடமலைக்குண்டுவில் நடந்த போராட்டத்தில் 60 பேரும்என மொத்தம் 560 ஆண்கள் மற்றும் 41 பெண்கள் உள்பட 601 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • thirunangai

  கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

 • chinaboat

  உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்