SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முதலக்கம்பட்டியில் அடிப்படை வசதி கேட்டு கலெக்டரிடம் மக்கள் மனு

9/11/2018 5:00:19 AM

தேனி, செப். 11: வைகை அணை அருகே உள்ள முதலக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த இந்திரா காலனி மக்கள், தங்கள் பகுதிக்கு அடிப்படைவசதிகள் செய்து தரக்கேட்டு தேனி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.வைகை அணை அருகே முதலக்கம்பட்டி ஊராட்சி உள்ளது. இதற்குட்பட்ட இந்திரா காலனியில் சுமார் 150 வீடுகள் உள்ளன. இதில் சுமார் 500 வசித்து வருகின்றனர். நேற்று இக்காலனியை சோந்தவர்கள் தேனி கலெக்டர் கலெக்டர் பல்லவிபல்தேவிடம் மனு அளித்தனர்.அதில் கூறியிருப்பதாவது: முதலக்கம்பட்டி இந்திரா காலனியில் 150 குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.அருந்ததியர் மக்கள் அதிகம் வசிக்கும் எங்கள் காலனியில் அடிப்படை வசதியான குடிநீர் இல்லை. 7 நாட்களுக்கு ஒரு முறை 20 நிமிடம் மட்டுமே குடிநீர்வழங்கப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இக்காலனியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாததால் அசுத்தம் தேங்கியுள்ளது. தெருவிளக்குகளும் எரிவதில்லை. கிராமத்தில் அனைத்து வார்டுகளிலும் கழிப்பிட வசதியிருக்கிறது. ஆனால், காலனி பகுதியில் மட்டும் கழிப்பிட வசதியில்லை.
எனவே, மாவட்ட நிர்வாகம் முதலக்கம்பட்டி இந்திரா காலனிக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், மின்சார,கழிப்பிட வசதி, நூலகம் அமைத்து தரவேண்டும் என மனுவில் வலியுறுத்தி உள்ளனர்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 15-01-2019

    15-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • MakarSankrantiFestival

    வட மாநிலங்களில் பெண்கள் கோலாகலமாக கொண்டாடிய மகர சங்கராந்தி பண்டிகை

  • 14-01-2019

    14-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 13-01-2019

    13-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 12-01-2019

    12-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்