போக்சோ வழக்கை வாபஸ் பெற மிரட்டல் : 3 பெண்கள் கைது
9/11/2018 4:59:43 AM
தேவதானப்பட்டி, செப். 11: தேவதானப்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டியில் போக்சோ வழக்கை திரும்ப பெற மிரட்டல் விடுத்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.தேவதானப்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டியில் கடந்த மாதம் 28ந்தேதி பிளஸ் 2 வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி, முருகேசன்(36) என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுகுறித்து சைல்டுலைன் அமைப்பினருக்கு மாணவி அளித்த தகவலின் அடிப்படையில் தேவதானப்பட்டி போலீசார், முருகேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதனால் முருகேசன் தலைமறைவாக உள்ளார்.இந்நிலையில் நேற்று முருகேசனின் அம்மா அமராவதி, சகோதரிகள் வனிதா மற்றும் அவரது கணவர் லட்சுமணன், காமாட்சி மற்றும் அவரது கணவர் மூர்த்தி, முருகேசனின் மனைவி பிரியா(24) ஆகிய 6பேரும், மாணவி வீட்டிற்கு சென்று அவரது அம்மாவிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளனர். வழக்கை வாபஸ் பெறாவிட்டதால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர்.இதுகுறித்து மாணவியின் தாய், தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து மிரட்டல் விடுத்த 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வனிதா, காமாட்சி, அமராவதி ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மண்ணுக்குள் புதைந்த 2 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு மூணாறில் பரபரப்பு
ரூ.2 ஆயிரம் வழங்கிட தமிழகஅரசு உத்தரவு வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர் பட்டியல் சர்வே வங்கி கணக்கு வாங்கும் பணி தொடங்கியது
கம்பம் பள்ளியில் பணம், காமிரா திருட்டு
விளைச்சல் அதிகம் விலையில்லாமல் வீழ்ந்தது சவ்சவ் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
டாஸ்மாக் கடைக்குள் புகுந்த ஏழரை அடி சாரைப்பாம்பு
உத்தமபாளையம் தாலுகாவில் முதியோர் உதவித்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு சர்வர் கோளாறாம்
17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு