SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனைத்துக்கட்சிகள் ‘பந்த்’ மாவட்டத்தில் 90 சதவீத கடைகள் அடைப்பு

9/11/2018 4:55:39 AM

சிவகங்கை, செப்.11:  சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துக்கட்சிகள் சார்பில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி நகர்ப்பகுதிகளில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய பாஜ அரசை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் அனைத்துக்கட்சிகள் சார்பில் பந்த் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்றன. மாவட்டத்தில் நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தில் அனைத்து வர்த்தக சங்கங்களும் கலந்துகொண்டதால் நகர்ப்பகுதிகளில் சுமார் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், திருப்புவனம், மானாமதுரை நகர் பகுதியில் சுமார் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சிவகங்கையில் கலெக்டர் அலுவலகம் முதல் பஸ் ஸ்டாண்ட் வரை அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நேரு பஜார், காந்தி வீதி, அரண்மனை வாசல் பகுதி உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளிலும் கடைகளை அடைத்து வர்த்தகர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். பால் கடைகள், மருந்துக்கடைகள் உள்ளிட்ட சில அத்தியாவசியமான கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தன. அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.
ஆட்டோக்கள், தனியார் வாகனங்கள் ஒரு சில இடங்களில் மட்டும் இயக்கப்பட்டன. சிவகங்கையில் மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, சிபிஐ(எம்எல்) உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சார்பில் பந்தையொட்டி சாலை மறியல் போராட்டம் நடந்தது. அரண்மணை வாசலில் இருந்து ஊர்வலமாக சென்றவர்கள் பஸ் ஸ்டாண்ட் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சின்னத்துரை, சிபிஐ மாவட்ட செயலாளர் கண்ணகி, சிபிஐ(எம்எல்) மாவட்ட அமைப்பாளர் ஜூவா தலைமையில் மறியலில் ஈடுபட்ட 83 பேரை சிவகங்கை டவுன் போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை: கடையடைப்பையொட்டி மானாமதுரை பழைய பஸ்ஸ்டாண்டு, புதிய பஸ் ஸ்டாண்டு, மரக்கடை வீதி, தெற்குரதவீதி, அண்ணாசிலை, தேவர்சிலை, காந்திசிலை, வாரச்சந்தை ரோடு உள்ளிட்ட வர்த்தக பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆட்டோக்கள், பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. கிராமங்களில் இருந்து நகருக்கு மக்கள் வராததால் பஸ்களில் கூட்டமில்லை. காலாண்டு தேர்வுகள் துவங்கியதால் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கின. பெட்ரோல், டீசல் பங்குகளில் வியாபாரம் இன்றி மந்தமாக காட்சியளித்தது. மாலை ஐந்து மணிக்கு மேல் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • newyork

  நியூயார்க்கில் 25 மாடி கட்டிடங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்றில் நடந்து சாகசம்: ஆச்சர்யத்தில் மக்கள்!

 • singaporebirds

  சிங்கப்பூரில் பறவைகளுக்கான பாடும் போட்டி: மனிதர்கள் பாடுவதை போன்று பிரதிபலித்த மெர்பொக் புறாக்களின் இசை

 • turkey

  துருக்கியில் மேயர் பதவிக்காக நடந்த மறுதேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி: உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

 • climate

  ஜெர்மனியில் பருவநிலை மாறுபாட்டை கண்டித்து நிலக்கரி சுரங்கத்தை முற்றுகையிட்ட போராளிகள்!

 • 25-06-2019

  25-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்