SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மழையை அள்ளித்தரும் தலவிருட்ச மரங்கள் கோயில் கோயிலாக நடும் தன்னார்வ அமைப்பு

9/11/2018 4:55:28 AM

திருப்புவனம், செப்.11: கோயில்களில் அழிந்துபோன தல விருட்ச மரங்கள் மேகத்தை அதிகம் ஈர்த்து மழை தரக்கூடியவை. எனவே தல விருட்ச மரங்களை மீண்டும் நட்டு பராமரிக்க வேண்டும் என, விழிப்புணர்வு அமைப்பு தெரிவித்துள்ளது. மதுரை தல விருட்சம் தன்னார்வ அமைப்பு, கோயில்களில் அழிந்துபோன தல விருட்ச மரங்களை கண்டறிந்து, மீண்டும் நட்டு பராமரிக்க வேண்டும் என்றுவிழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த அமைப்பு சார்பில் திருப்புவனம் அருகே கொந்தகை ஆதிசிவன் கோயிலில் நாகலிங்கமரம் நடப்பட்டது. தலவிருட்ச அமைப்பாளர் டாக்டர் சிவகுருநாதன் கூறுகையில், ‘‘தமிழகத்தில் தற்போது வறட்சி நிலவி வருகிறது. மழை பொழிவது அரிதாகி வருகிறது. இதற்கு புவி வெப்பமயமாகி வருவதே முக்கிய காரணம். அந்த காலத்தில் மாதம் மும்மாரி மழை பெய்தது. விவசாயம் செழித்தது. ஆனால் நகர்மயமாக்கலால் தோப்புகளை அழித்து வீட்டடி மனைகளாக மாற்றிவிட்டோம்.  இதனால் மழை மேகங்களை ஈர்க்கும் மரங்கள் இல்லை. எங்கள் அமைப்பு சார்பில் 5 ஆயிரம் மரங்கள் பாட்டம், பொட்டப்பாளையம், பனையூர் பகுதிகளில் நடப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு கோயில் இருக்கும். அதற்கான தல விருட்சங்களும் இருந்துள்ளன. அந்த தல விருட்சங்கள் மழை மேகங்களை அதிகம் ஈர்க்கும் தன்மையுடையவை. அதனால் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. ஆகவே மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம கோயில்களிலும் தல விருட்சங்களை அறிந்து, அந்த மரத்தை நட்டு கிராமமக்கள் பராமரிக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். தற்போது கொந்தகை ஆதி சிவன் கோயிலில் தல விருட்சம் நடப்பட்டுள்ளது’’ என்றார்.  வழக்கறிஞர் சீனிவாசன், கோவிந்தன், என்ஜினியர் நாராயணன், வங்கி அதிகாரி மாணிக்கம், கொந்தகை சேது, செந்தில் ஆகியோர் கலந்துகொண்டனர்.  


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colombiacarfestival

    கொலம்பியாவில் 29வது கார் திருவிழா : தானியங்கி வாகங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

  • vietnamramnathgovind

    வியட்நாமில் தேசிய சபை தலைவர் நிகுயென் தி கிம் நிகானுடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • modihariyana

    அரியானாவில் எக்ஸ்பிரஸ் சாலை மற்றும் மெட்ரோ ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார் மோடி

  • kajadeltarelief

    கஜா புயலால் டெல்டா பகுதி மக்கள் கடும் பாதிப்பு : நிவாரணம் கோரி அதிகாரிகளுடன் வாக்குவாதம்

  • 20-11-2018

    20-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்