மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள், கேரம் போட்டி
9/11/2018 4:55:15 AM
சிவகங்கை, செப்.11: சிவகங்கையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சைக்கிள் மற்றும் கேரம் போட்டிகள் நடக்க உள்ளன.
சிவகங்கை மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரபு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கையில் அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்.15 அன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டிகள் நடைபெறவுள்ளன. 13 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ, மாணவிகளுக்கு 10 கி.மீ, 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ தூரம் போட்டிகள் நடக்க உள்ளன. போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் கண்டிப்பாக தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர்களிடம் இருந்து பிறந்த தேதி சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். சாதாரண சைக்கிள்களை போட்டிகளில் பயன்படுத்த வேண்டும். போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியருக்கு பரிசுகளும், ஒன்று முதல் பத்து இடங்களை பெறும் மாணவ, மாணவிகளுக்கு தகுதிச்சான்றிதழ்களும் வழங்கப்படும். செப்.15 அன்று மாவட்ட அளவிலான கேரம் போட்டி சிவகங்கை மாவட்ட திறந்தவெளி விளையாட்டரங்கில் நடக்க உள்ளது. மழலை வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை இளநிலை பிரிவு, ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை முதுநிலை பிரிவு, ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரு பிரிவாக இப்போட்டிகள் நடக்கின்றன. கேரம் போட்டிக்கு sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியரிடமிருந்து வகுப்பு சான்றிதழ் பெற்று வர வேண்டும். இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
மக்களவை தேர்தலையொட்டி ரவுடிகள் லிஸ்ட் கணக்கெடுப்பு
இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம்
அழகப்பா பல்கலை பாரா விளையாட்டு மாணவர்கள் சாதனை
மக்கள் தொகை உயர்வால் உணவு, குடிநீர் பற்றாக்குறை வர வாய்ப்பு சிக்ரி கருத்தரங்கில் பகீர் தகவல்
திருப்புத்தூர் அருகே ரேஷனில் பாமாயில் கடத்திய விற்பனையாளர் சிக்கினார்
கால்நடை துறை நேர்காணல் நிறுத்திவைப்பு