SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சதுர்த்தி விழாவையொட்டி பிள்ளையார்பட்டியில் நாளை தேரோட்டம்

9/11/2018 4:54:11 AM

திருப்புத்தூர், செப்.11: திருப்புத்தூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நாளை மாலை தேரோட்டம் நடைபெறுகிறது.திருப்புத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பகவிநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2ம் திருநாள் முதல் 8ம் திருநாள் வரை தினந்தோறும் காலையில் வெள்ளி கேடகத்திலும், இரவு சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடந்து வருகிறது. 6ம் நாளான நேற்று முன்தினம் அசுரனை வதம் செய்யும் கஜமுக சூரசம்ஹாரம் நடந்தது. 9ம் நாளான நாளை காலையில் கோயிலில் இருந்து திருத்தேருக்கு சுவாமி எழுந்தருளல் நடைபெறும். மாலை வருடம் ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி தருவார். மாலை 4 மணியளவில் பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் நடைபெறும். இதில் சண்டிகேஸ்வரர் தேரை பெண்கள் மட்டும் வடம் பிடிப்பது சிறப்பாகும். இரவு சுவாமி யானை வாகனத்தில் திருவீதி உலா வருவார். 13ம் தேதி காலை கோயில் குளத்தில் விநாயகர் சதுர்த்தி தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொளுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு பஞ்சமூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும்.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

  • londonprotest

    லண்டனில் உலக வெப்பமயமாதலுக்கு எதிராக காலநிலை மாற்ற ஆர்வலர்கள் நடத்திவரும் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்