SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநில சிலம்ப போட்டியில் மானாமதுரை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 10 பதக்கம்

9/11/2018 4:53:48 AM

மானாமதுரை, செப்.11:  மாநில அளவிலான சிலம்ப விளையாட்டு போட்டிகளில் மானாமதுரை அரசுப்பள்ளி மாணவர்கள் 10 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.மதுரையில் மாநில அளவிலான சிலம்ப போட்டி கோரிப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகளில் மானாமதுரை அருகே உள்ள கல்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் மானாமதுரை வீரவிதை சிலம்ப பயிற்சி பள்ளி சார்பில் பங்கேற்றனர்.
இதில் 10 வயதில் இருந்து 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் மாணவர்கள் தினேஷ், கவியரசு, ஜெரோம், ஆசிர், சிவசக்தி, கோபிகிருஷ்ணன், முகுந்தன், மதன், மனோஜ்குமார் ஆகியோர் முதலிடத்தையும், அருண்பாண்டியன், தங்கமணி ஆகியோர் இரண்டாம் இடம் பெற்று எட்டு தங்கப்பதக்கங்களையும், 2 வெள்ளி பதக்கங்களையும் பெற்று சாதனை படைத்தனர். தலைமை ஆசிரியர் சேவியர் ஆரோக்கியதாஸ், பயிற்சியாளர் பெருமாள் மற்றும் பெற்றோர்கள் வெற்றிபெற்ற மாணவர்களை பாராட்டினர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்